மும்பை: இந்தியப் பெண்கள் தங்களின் ஆடை,திருமண வாழ்க்கை,தனித்து இருப்பது அல்லது லெஸ்பியனாக இருப்பது ஆகியவற்றில் சுந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள குறும்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ள இந்தக் குறும்படம் 2 நாளில் 3 லட்சத்து 33 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

பெண்கள் சுதந்திரம் வரவேற்க ஒன்றுதான் என்றாலும் வரம்பு மீறும் ஆண்களைப்போல பெண்களின் சுதந்திர நடவடிக்கையும் மாறிவிடக் கூடாது என்ற கருத்துக்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அலியாபட் மற்றும் மாதுரி தீட்சீத்துக்கு அடுத்த படியாக தீபிகா படுகோனே பெண்கள் மேம்பாட்டுக்கான ஒரு குறும்படத்தில் நடித்து உள்ளார்.

அதன் தலைப்பு ”மை சாய்ஸ்’ காக்டெய்ல் மற்றும் பென்னி நிறுவனம் தயாரித்து உள்ளது. ஹோமி அடஜனியா என்பவர் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

கருப்பு வெள்ளையில் தயாராகி உள்ள இந்தக் குறும்படத்தில் 29 வயது நடிகை தீபிகா படுகோனே கூண்டில் அடைபட்ட எண்ணங்களை விடுமாறு பெண்களுக்கு அழைப்பு விடுத்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

பெண்கள் தங்களின் தொழில் மற்றும் வாழ்க்கை முறைக்காகவே ஆடை அணிகிறார்கள் அதை ஆபாசம் என ஆண்களோ அல்லது பெண்களோ முடிவு செய்ய வேண்டாம் என்று படத்தில் தோன்றி கூறுகிறார்.

”நான் விரும்பும் வகையில், வாழ்வது எனது விருப்பம் எந்த ஆடையை அணிய வேண்டும் என்பது எனது விருப்பம், எனது உடலுக்கு எது ஏற்றது என்பது நான் முடிவு செய்வேன்.

நான் எப்போது திருமணம் செய்வேன் அல்லது நான் தனிமையில் வாழ்வேன் அல்லது நான் லெஸ்பியனாக இருப்பேன் என அனைத்தும் எனது முடிவு. ”என அந்த வீடியோவில் கூறி உள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version