ஈராக்கைச் சேர்ந்த அலி சதாம் என்ற நபர் காலை உணவாக 24 முட்டைகளையும் மதிய உணவாக 2 முழுக் கோழிகள் மற்றும் 12 சப்பாத்திகளையும் இரவு உணவுக்கு ஒரு முழு ஆடு, 2 லீற்றர் பால் மற்றும் 15 அரேபிய ரொட்டிகளையும் உணவாக உட்கொண்டு வருகிறார்.

ஈராக்கைச் சேர்ந்த அலி சதாம் என்ற நபர் 301 கிலோ எடையுடன் வாழும் அதிசய மனிதர் ஆவார். அவரது நிறை 301 கிலோவையும் தாண்டி அதிகரித்து கொண்டே செல்கின்றது.

இந்நிலையில் குறித்த நபரால் உணவு உட்கொள்வதை கட்டுப்படுத்த முடியாததால், நிரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்க குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அவசர சிகிச்சை மேற்கொள்ள கடந்த 16ஆம் திகதி ஈராக்கிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அலியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உடலின் ஒவ்வொரு உறுப்பை சுற்றியும் அதிக அளவில் கொழுப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு laparoscopy சிகிச்சையை மேற்கொள்ள மருத்தவர்கள் முடிவு செய்தனர்.

சமீபத்தில் இந்த சிகிச்சையை இரு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக்குழு ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

இதுகுறித்து சிகிச்சை அளித்த மருத்தவர் டீப் கோயல்(Deep Goel) கருத்துத் தெரிவிக்கையில்,

சிகிச்சை முடிந்த 5 நாட்களில் அலியின் உடலில் இருந்து 20 கிலோ எடை குறைந்திருக்கிறது. மேலும் அடுத்த ஓராண்டிற்குள் 151 கிலோ எடை வரை குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அலி தெரிவிக்கையில்,

அதிக எடையுடன் நான் ஒவ்வொரு நாளும் அவதியுற்று வந்தேன். தற்போது மருத்துவர்கள் எனக்கு திரவ உணவுகளை அளித்துவருவதால் எடை குறைவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் நான் ஒரு சராசரி மனிதரைப் போல் வாழ்க்கையை தொடங்குவேன் எனமகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version