மயிலங்காடு ஸ்ரீமுருகன் வித்தியாலய குடிநீர்தாங்கியில் நஞ்சு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பொலிசாரிடம் கேட்டு, தலையை சுற்றி உட்கார்ந்துவிட்டார்.
“சம்பவம் பற்றி இப்பொழுதும் புலனாய்வு விசாரணைகள் நடந்து வருகின்றன. விசாரணை முடிந்ததும், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அது பற்றி அறிவிப்பார்.
ஆனால் ஒருவாய் மட்டுமே உள்ளது. பேசுவதை குறைத்து கொள்வதற்காகவே அது உள்ளது என்றார்.
அவர் என்ன சொன்னார் என்று புரியாமல் அனந்தி மயக்கம் வராதகுறையாக உட்கார்ந்து விட்டார்.