உத்தரபிஅரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த தம்பதிகள் ஓம் பிரகாஷ்- சர்வேஷ். சர்வேஷ் கர்ப்பிணியாக இருந்தார். ஏற்கனவே இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளது கடந்த மார்ச் 26 ந்தேதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் முகத்தில் யானைக்கு இருப்பது போன்று தும்பிக்கை உள்ளது. இதை பார்த்த அக்கம் பக்க மக்கல் குழந்தை விநாயக கடவுளின் அவதாரம் என எண்ணினர்.
இதை தொடர்ந்து ஏராளமான மக்கள் தினமும் வந்து குழந்தையை பார்த்து வணங்கி செல்கின்றனர். நாளுக்கு நால் குழந்தையை பார்க்க வரும் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது.
இது குறித்து குழந்தையின் உறவினர் ரஜனி கூறும் போது குழந்தை காலை 7 மணிக்கு பிறந்தது. அதன் முகத்தில் துதிக்கை போன்ற அமைப்பு இருந்தது இதை பார்த்த அனைவரும் குழந்தை விநாயகரின் அவதாரம் என கூறுகின்றனர்.
தினமும் கூட்டம் கூட்டமாக மக்கள் வருகிறார்கள். ஏன் இங்கு வருகிறீர்கள் என அவர்களிடம் கேட்டால் அந்த குழந்தையின் பார்வை பட்டால் நல்லது நடக்கும் என நம்புவதாக தெரிவித்தனர்.
என கூறினார்.
எனினும் டாக்டர்கள் இது குறித்து கூறும் போது மரபணு குறைபாடு , ஊட்டசத்து குறைபாடு மற்றும் மாசு காரணமாக இது போல் குழந்தை பிறந்து இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்து
உள்ளனர்.