மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதை கேள்விப்பட்டதும் பொலிஸ் காவலில் இருந்த கணவர் அங்கிருந்த போத்தலை உடைத்து தன்னை குத்தி தானும் தற்கொலை முயற்சியில ஈடுபட்ட சம்பவம்  இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த எட்டுமாதங்களுக்க முன்னர் இளவாலை பிரான்பற்றைச் சேர்ந்த பெண்ணுக்கும் வவுனியா நெழுக்களத்தைச் சேர்ந்தவருக்கும் இடையில் திருமணம் நடை பெற்று இருவரும் இளவாலைப் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் மனைவியின் நகையை அடகு வைத்தமை சம்பந்தமாக மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து மாமியார் இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் பொலிசாரினால் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் மனைவி இன்று காலையில் தூக்கிட்டு மரணம் அடைந்துள்ளார். இதனை மாமியார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மருமகனுக்கு தெரிவித்ததும் இவர் தன்னைத்தானே போத்தலை உடைத்தக் குத்தி ஆபத்தான நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுபவர் சுபாகரன் சுமதி வயது 24 என்பவராகும்.

இவருடைய சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவருடைய கணவரான சிவபாதம் சுபாகரன் 23 வயது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளவாலைப் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version