தனது சகோதரர் மற்றும் தந்தை ஆகியோரை விடுதலைப் புலிகளே கூட்டிச் சென்றனர்.

எனவே இவ்விடயம் தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானை விசாரணை செய்யுமாறு இலங்கை உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்னையில் நடைபெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாட்சியமளித்தார்.

இதன் போது 1990ஆம் ஆண்டு புலிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போன தனது சகோதரர் அக்றம் சம்பந்தமாகவும் தனது தந்தை சம்பந்தமாகவும் முன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி விசாரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விசாரணைகள் கடந்த இருநாட்களாய் கல்முனையில் அதன் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version