மாஸ்கோ: மத்திய ரஷ்யாவை சேர்ந்த அனடாலி(47) என்பவர் தனது முதல் மனைவியை சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

சமீபத்தில் ஸ்வெட்லானா இல்வினா என்ற 45 வயது பெண்ணை சந்தித்த அவர் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா? என கேட்க ஸ்வெட்லானாவும் பச்சைக்கொடி காட்டினார்.

இதையடுத்து, 3 மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் கணவன்-மனைவியாக வாழத் தொடங்கினர்.

எல்லா இரவுகளையும் போலவும் அன்றிரவும் இந்த ஜோடிகள் படுக்கையில் இருந்தபோது, உணர்ச்சிவசப்பட்ட அனடாலி, தன்னை மறந்த நிலையில் தனது முன்னாள் மனைவியான ஒல்கா என்ற பெயரை உச்சரித்து முனகத் தொடங்கினார்.

இதை கேட்ட ஸ்வெட்லானா ஆத்திரத்துடன் விருட்டென்று படுக்கையை விட்டு எழுந்து நின்றார்.

இன்னும் முதல் மனைவியை மறக்க முடியாத நீ என்னுடன் போலியாக குடும்பம் நடத்துவது ஏன்? என்று எகிறிப் பாய்ந்தார்.

பழக்க தோஷத்தில் அவளது பெயரை தவறிப்போய் சொல்லி விட்டேன் என்னை மன்னித்து விடு என்று கெஞ்சிய கணவனின் குரல் அவளை சமாதானப்படுத்தவில்லை.

பெண் புத்தி பின் புத்தி என்பார்கள். அதிலும் கணவனை பங்குபோட எந்தப் பெண்ணும் சம்மதிக்கவே மாட்டாள்.
இந்த நிலையில் இவளை இப்போதைக்கு சாந்தப்படுத்த முடியாது, காலையில் எழுந்து பேசிக் கொள்ளலாம் என்று அனடாலி தூங்கிவிட்டார்.

ஆனால், இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த ஸ்வெட்லானா தூங்கிக் கொண்டிருந்த கணவனை வெறி தீர கத்தியால் குத்தி கொன்றார். அதுமட்டுமின்றி, போலீசாருக்கு போன் செய்த அவர் நடந்த சம்பவத்தை விளக்கி கூறி சரணடைந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version