14 வயதான பாடசாலை மாணவியுடன் காதல் தொடர்பு கொண்டிருந்த 16 வயது மாணவரொருவர் சில தினங்களுக்கு முன்னர் காதலியை வயதான பெண்கள் இருக்கும் வீடொன்றுக்கு அழைத்துச் சென்று இரவைக் கழித்துள்ளதாக களுத் துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை நகரிலுள்ள பாடசாலை ஒன்றின் 8 ஆம் ஆண்டில் மாணவி கல்வி கற்று வந்துள்ளதுடன் அதே பாடசாலை யில் 11 ஆம் ஆண்டில் மாணவன் கல்வி பயின்று வந்துள்ளான் என் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தமது மகள் காணாமற் போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பின்னர் தாய் மகளை பொலிஸார் நிலையத்தில் ஒப்படைத்த பின்னர் மாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்த மாணவிக்கும் மாணவனுக்கிமிடையில் காதல் தொடர்பு இருந்தாகவும் பின்னர் இருவரும் பாடசாலைக்கு வந்து பாடசாலையின் பின்னர் இந்த வீட்டுக்கு வந்து இரவைக் கழித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காதலனான 16 வயது மாணவனை பொலிஸ் நிலையத்திற்கு வரும்படி பொலிஸார் அறிவித்த போதும் மாணவன் வராததால் அவனை கைது செய்ய நடவ டிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
5 வயது மகளை வல்லுறவு செய்த தந்தை கைது
10-04-2015
5 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 45 வயது தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு நடந்த கொடுமை குறித்து சிறுமி தனது தாயிடம் (29 வயது) கூறியதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தங்கொட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கடுமையான வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மாரவில நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.