காணா­மல்­போனோர் தொடர்­பாக விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அம்­பாறை மாவட்ட அமர்வு நேற்று ) இரண்­டா­வது நாளா­கவும் ஆலை­ய­டி­வேம்பு பிர­தேச செய­ல­கத்தில் இடம்பெற்­றது.

இதில் கலந்­து­கொண்டு சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

நேற்­றைய அமர்வில் பெருந்­தொ­கை­யான தமிழ் முஸ்லிம் மக்கள் கண்ணீர் மல்க ஆணைக்­கு­ழு­விடம் தமது முறைப்­பா­டு­களை முன்­வைத்­தனர்.

 

அக்­க­ரைப்­பற்றைச் சேர்ந்த முகம்­மது அலிமா நூறு நிஷா கண்ணீர் மல்க ஆணைக்­கு­ழு­விடம் சாட்சியம­ளிக்­கையில்

1990ஆம் ஆண்டு விவ­சாய அறு­வ­டைக்­காகச் 20 பேருடன் சென்ற எனது கணவன் காதர் வெல்லை வெள்ளத்­தம்பி வயல் வெளியில் நின்­ற­போது விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தினர் அவர்­களைப் பிடித்து கதறக் கதற உழவு இயந்­திரப் பெட்­டி­யொன்றில் ஏற்றிச் சென்­றதை கண்ட எனது உற­வினர் எம்­மிடம் வந்து சொன்னார்.

உடனே நாம் சம்­பந்­தப்­பட்ட இடத்­தினை நோக்கி ஓடிச் சென்று பார்த்தோம். எங்­குமே அவர்கள் சென்ற தட­யங்­களே தென்­ப­ட­வில்லை. எல்லா இடங்­க­ளிலும் தேடி­ய­லைந்தோம்.

ஆனால் இது­வரை அவரை கண்டு பிடிக்க முடி­யா­மலே போய்­விட்­டது. வரு­மா­னமே இல்­லாத எனக்கு மூன்று பிள்­ளைகள்.

கணவர் இல்­லாமல் போன­போது எனது கடை­சிப்­பிள்­ளையான ஆறு மாதக் கைக்­கு­ழந்­தை­யு­டன்தான் நானி­ருந்தேன்.

அவர்­களில் இரு பெண்­க­ளை­களை ஏதோ ஒரு வகையில் திரு­மணம் செய்து கொடுத்து விட்டேன். கணவர் இல்­லாமல் போன செய்தி கேட்ட எனது மூன்­றா­வது மகன் அதிர்ச்­சி­யுற்று தற்­போது அங்கவீன­ராக உள்ளார்.

அவரைக் காணும்­போ­தெல்லாம் எனது கண­வனின் முகம் வந்து செல்­கின்­றது என்றார்

showImageInStoryஎனது மகனை தேடாத இடமேயில்லை

கடந்த 1990ஆம் ஆண்டு செப்ெ­டம்பர் மாதம் 24ஆம் திகதி நாங்கள் இருந்த முகா­முக்கு வந்த இரா­ணு­வத்­தினர் எனது மகனை விசா­ர­ணைக்­காக அழைத்துச் சென்­றார்கள். ஆனால் இது­வரை

 

அவரை நாம் தேடாத இடமே இல்லை. அவ­ருக்கு என்ன நடந்­தது என்று ஆணைக்­குழு எமக்கு தெரி­யப்­ப­டுத்த முயற்சி செய்­ய­வேண்டும் என்று அக்­க­ரைப்­பற்று சிங்­கள மகா வித்­தி­யா­லய வீதியைச் சேர்ந்த க.சின்­னத்­தங்­கம்மா தெரி­வித்தார்.

காணா­மல்­போனோர் தொடர்­பாக விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அம்­பாறை மாவட்ட அமர்வு நேற்று ) இரண்­டா­வது நாளா­கவும் ஆலை­ய­டி­வேம்பு பிர­தேச செய­ல­கத்தில் இடம்பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார்.

நேற்­றைய அமர்வில் பெருந்­தொ­கை­யான தமிழ் முஸ்லிம் மக்கள் கண்ணீர் மல்க ஆணைக்­கு­ழு­விடம் தமது முறைப்­பா­டு­களை முன்­வைத்­தனர்.

ஆல­ய­டி­வேம்பு பகு­தியை சேர்ந்த வீ.விம­லா­தேவி சாட்­சி­ய­ம­ளிக்­கையில்

அக்­க­ரைப்­பற்று வட்­ட­மடுப் பிர­தே­சத்தில் தான் வளர்த்து வந்த மாடு­களைத் தேடிச் சென்ற எனது கணவர் தம்­பி­ரா­சா­விடம் சாகாமம் பிர­தே­சத்தில் முகாம்­களை அமைத்து செயற்­பட்டு வந்த இராணுவத்­தினர் அடை­யாள அட்­டை­யினை வாங்­கி­ய­தாக அவ­ருடன் சென்­ற­வர்கள் என்­னிடம் கூறினார்கள்.

அவர் தேடிச் சென்ற மாடுகள் வந்­தன. ஆனால் மாடு­களைத் தேடிச் சென்­றவர் இது­வரை வீடு வந்து சேர­வில்லை என கண்ணீர் மல்க தெரி­வித்தார்.

அக்­க­ரைப்­பற்று பகு­தியை சேர்ந்த எஸ்.கண்­மணி. சாட்­சி­ம­ளிக்­கையில்

1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆந்­தி­கதி விவ­சாய அறு­வ­டையின் நிமித்தம் கூலித் தொழி­லுக்­காகச் சென்ற எனது 19 வயது மகன் செல்­லத்­துரை ராஜ­துரை பொத்­தா­னைக்குச் சென்றார்.

அவ்­வே­ளையில் விேசட அதி­ர­டிப்­ப­டையின் கட்­டுப்­பாட்­டுக்குள் உள்ள அப்­ப­கு­தியில் சென்­ற­வர்­களை அன்­றைய தினம் சுற்றி வளைத்து பிடித்­த­தாக அய­ல­வர்கள் என்­னிடம் சொன்­னார்கள்.

அதனைப் பார்க்க நான் ஓடோடிச் சென்­ற­போது அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் முகாமில் பெற்றோல் ஊற்றி சிலரை எரித்துக் கொண்­டி­ருந்­தனர்.

அதில் எனது மகனும் எரிந்து கொண்­டி­ருக்­கிறார் என்று யாரோ ஒருவர் சொல்­லக்­கேட்டு தலை சுற்றி மயக்­க­ம­டைந்தேன். என் உயிரே போனது போல் இருந்­தது என தேம்பி அழு­த­வாறு கூறினார்.

அக்­க­ரைப்­பற்று சிங்­கள மகா வித்­தி­யா­லய வீதியைச் சேர்ந்த க.சின்­னத்­தங்­கம்மா சாட்சியமளிக்கையில்

17 வய­து­டைய பாட­சா­லையில் அதீத திறமை கொண்ட எனது மகன் சிவா­னந்தம் செல்­வராஜ் பாடசாலை விட்டு வீடு வந்­த­போது இரா­ணு­வத்­தினர் எமது பிர­தே­சத்­தினை சுற்றி வளைத்துக் கொண்டிருந்­தார்கள்.

இதனால் பயம் கொண்ட நாம் உட­ன­யாக திருக்­கோ­விலில் அமைந்­துள்ள இடைத்­தங்கல் முகா­மொன்றிற்குச் சென்று தஞ்­ச­ம­டைந்தோம்.

1990ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 24ஆந் திகதி நாங்கள் இருந்த முகா­முக்கு வந்த இரா­ணு­வத்­தினர் எனது மகனை விசா­ர­ணைக்­காக அழைத்துச் சென்­றார்கள்.

ஆனால் இது­வரை அவரை நாம் தேடாத இடமே இல்லை. அவ­ருக்கு என்ன நடந்­தது என்று ஆணைக்­குழு எமக்கு தெரி­யப்­ப­டுத்த முயற்சி செய்­ய­வேண்டும் என்று கண்ணீர் மல்க சாட்­சி­ய­ம­ளித்தார் .

 

நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 21 முறைப்பாட்டாளர்களுக்கும், நிந்தவூர் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 24 முறைப்பாட்டாளர்களுக்கும், இறக்காமம் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற 16 முறைப்பாட்டாளர்களுக்குமாக 61 பேருக்கு விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version