நெல்லை: நெல்லையில் 10 வகுப்பு மாணவன் ஒருவருடன் ஆசிரியை ஒருவர் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கருப்பசாமி கோவில் பகுதியை சேர்ந்த சிவசுந்தரபாண்டியன் என்ற மாணவன் ஈ.விலக்கு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
அதன்பின் அவனை காணவில்லை இரவு வீட்டுக்கும் வரவில்லை இந்நிலையில் செங்கோட்டையை சார்ந்த ஆசிரியையும் தனது வீட்டில் தோழி ஒருவருக்கு திருமணம் நடப்பதாக கூறி சென்றுள்ளார் அவரையும் காணவில்லை.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.இந்நிலையில் மாணவன் காணாமல் போன சம்பவம் கூறித்து அன்றைய தினமே காணமல் போன ஆசிரியை வீட்டில் விசாரித்த போதுதான் அவரையும் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.
26 வயதுடைய எம்.எஸ்.சி.படித்த ஆசிரியை ஒருவர் 16 வயதுடைய மாணவனுடன் ஓடிய சம்பவம் நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் இந்த மாணவன் ஏற்கனவே பள்ளி நிர்வாகத்தால் பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோரை அழைத்துவந்து மன்னிப்பு கோரியதாகவும், சம்பவம் நடப்பதற்கு முன் சில மாணவர்களிடம் அந்த ஆசிரியையை தான் காதலிப்பதாகவும்,கூட்டிக் கொண்டு ஓடப்போவதாகவும் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவன் ஏற்கனவே 9ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு ஆசிரியையையும் காதலித்துள்ளான் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் காதலுக்கு கண்ணில்லை என்பார்களே அது இந்த மாதிரி அவலங்களை நினைக்கும் போது உண்மையாகத்தான் தோன்றுகிறது.