முதல் முறையாக விஜய் படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அவர்கள் ஸ்ருதிஹாஸன், ஹன்சிகா, அஞ்சலி.. அடுத்து நந்திதா.
படம்.. புலி! சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போது ஆந்திராவின் அடர்ந்த காட்டுபகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ஸ்ருதி – ஹன்சி
பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் முதலில் நாயகிகளாக ஒப்பந்தமானவர்கள் ஸ்ருதி ஹாஸன் மற்றும் ஹன்சிகா.
நந்திதா
இந்நிலையில் இன்னொரு ரோலுக்காக நந்திதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரும் ஓகே சொல்லி, புலி படக்குழுவுடன் இணைந்துள்ளார்.
அஞ்சலி
இதுதவிர ‘அப்பா டக்கர்’ மற்றும் ‘மாப்பிள்ளை சிங்கம்’ படங்கள் மூலம் தமிழுக்கு மறுபிரவேசம் செய்துள்ள அஞ்சலியிடமும் பேசி வருகிறார்களாம்.