பொலநறுவையில தந்தையை மகன் கொன்ற சம்பவம் இடம்பெற்று சில மணிநேரத்தில் மட்டக்களப்பில் தந்தையை சரமாரியாகத் தாக்கி கொலை செய்த 24 வயது மகன் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் 6 பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய ஞானமுத்து விஜயன் என்பவரை அவரது மகன் கடுமையாக பொல்லு மற்றும் கால்களாலும் தாக்கியுள்ளார்.
இதனால் கடுமையாக காயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமானார்.
இவரது உடல் பல துண்டுகளாக சிதறியுள்ளது.
இருவரது சடலங்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தந்தையை கொன்றுவிட்டு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்த மகன்!