இலங்கை பரப்பளவில் ஒரு சிறிய நாடாக இருந்தபோதும், உலகளாவிய ரீதியில் மக்கள் கவனத்தை ஈர்த்த ஒரு நாடாக கருதப்படுகிறது.

கிரிகெட் வெற்றி மற்றும் யுத்த வெற்றி போன்ற பல்வேறு துறைகளில் இலங்கை உலகில் அனைவராலும் போற்றப்படும் ஒரு நாடாகும்.

அந்த வகையில் இலங்கை யுவதி ஒருவர் பிரித்தானியாவில் முன்னணி அரசியல் வாதியாக காணப்படுவது இலங்கையின் கௌரவத்தை மேலும் ஒருபடி உயர்த்துவதாக காணப்படுகிறது.

சமலி பெனாண்டோ, 1979 ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 36 வயதாகிறது. அவரது தாய் வனீதா பெனாண்டோ ( தாதி ), தந்தை சுமல் பெனாண்டோ (சட்டத்தரணி)

chamali copie
(what  a beautiful girl)
சமலி பெனாண்டோ தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் அதேவேளை, இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில், கேம்பிரிட்ஜ் நகரில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

பிரித்தானியாவின் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சட்டத்தரணியான சமலி பெனாண்டோ பிரித்தானியாவின் பாரிஸ்டர் பட்டதாரியும் ஆவர்.

சட்டத்தரணி தொழிலுக்கு மேலதிகமாக மன நேயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தும் அவர், மன நேயாளர்களுக்கு கையுறை ஒன்றையும் அணிவிக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

சமூகத்தில் மன நேயாளர்களுக்கு தேவையான உபசரிப்புக்கள் கிடைக்கப்பெறவேண்டும் என்ற ஒரு காரணத்தினாலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

அதேவேளை அவர் தற்பொழுது பிரித்தானியா அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு பெண்ணாகவும் காணப்படுகிறார் .

தனது உயர்கல்விக்காக அரசியலை தெரிவு செய்த காலம் தொட்டு, அரசியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாக சமலி பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

what  a beautiful girl

இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது 
18-04-2014

இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மஹாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​, பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார்.
மேற்படி  விருதானது (Elsevier and Materials Science and Engineering C Young Researcher Award)  உயிரியல் விஞ்ஞானம் ,
​​பொருள்சார் பொறியியல் தொடர்பான ஆய்வியல் மற்றும் கோட்பாடுசார்  விடயங்கள் பற்றிய சிறப்பு ஆராய்ச்சிகளை அடையாளங்கண்டு அவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு,  35 வயது அல்லது அதற்கு குறைவான தனிநபர்களுக்கு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியினால் வழங்கப்படுகின்றது.
சுந்தர் தனது கலாநிதி பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் அவர் முன்னெடுத்த இலத்திரனியல் மற்றும் நீர் இயக்கவிசை தொடர்பான ஆராய்ச்சியொன்றுக்காக பெற்றுக்கொண்டார். இதுதவிர பொருளறிவியல் துறையில் பல்வேறு வெற்றிகர ஆராய்ச்சிகளை அவர் முன்னெடுத்துள்ளார்.
விருதினை வென்றமை தனக்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள கலாநிதி. சுந்தர் மஹாலிங்கம்  தனது பேராசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
​இலங்கையில் பிறந்த ​கலாநிதி. சுந்தர் மஹாலிங்கம் கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
​சுந்தர் தன்னுடைய தற்போதைய இலட்சியமாக ​ பொருள்சார் பொறியியல் மற்றும் விஞ்ஞானவியலில் விரிவுரையாளராக விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.
Share.
Leave A Reply

Exit mobile version