நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (16) என்ற மாணவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவன் சிவசுப்பிரமணியனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை கோதைலட்சுமி என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது.

இந்த காதல் விவகாரம் மாணவனின் பெற்றோருக்கு தெரிய வரவே, ஆசிரியையை கண்டித்துள்ளதோடு, மகனுக்கு அறிவுரையும் கூறியுள்ளதாக தெரிகிறது.

11112721_898170680240048_5674145457002305592_n

இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வந்த மாணவன் கடைசித் தேர்வு எழுதி முடித்தக் கையோடு ஆசிரியையும், மாணவனும் அங்கிருந்து மாயமாகினர்.

இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதில், தனது மகனை ஆசை வார்த்தை கூறி ஆசிரியை கடத்தி சென்றுவிட்டதாகவும், வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளனர்

இதனால் இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசுப்பிரமணியனும், ஆசிரியை கோதை லட்சுமியும் சென்னை கும்மிடிபூண்டியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதற்கிடையில், மாயமான ஆசிரியை கோதைலட்சுமி பேஸ்புக்கில் வேறு பெயரில் கணக்கு வைத்துள்ள விஷயம் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் அவருக்கு பல நண்பர்கள் கிடைத்துள்ளதும், அதன் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

கோதைலட்சுமியின் செல்போன் எண்ணை சோதனை செய்ததில் அந்த நபரிடம் போனில் அதிக நேரம் பேசி வந்துள்ள தகவலும் உறுதிப்பட்டுள்ளது. அந்த நபர் சென்னை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

கோதை லட்சுமி அதிக நேரம் பேசிய நபரின் செல்போன் எண்ணும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஆனால் அந்த எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளது.

எனவே ஆசிரியை கோதை லட்சுமியை கண்டுபிடிக்கும் பணியை காவல் துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.

10ம் வகுப்பு படித்த 15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை உல்லாசமாக இருக்கும் அதிர்ச்சி வீடியோ

Share.
Leave A Reply

Exit mobile version