விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை, இந்­திய அமை­திப்­ப­டை­யினர் பல­முறை அழிக்கும் அளவுக்கு நெருங்­கி­யி­ருந்­தனர் என்றும், ஆனால், அவரை தப்பிச் செல்ல வழி விடு­மாறு உத்தரவிடப்பட்­டி­ருந்­தது என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார். இரண்­டா­வது, தாமே பயிற்சி அளித்தவர்களுடன் போரி­டு­கின்ற சங்­க­ட­மான நிலைக்கு உள்­ளா­கி­ய­தா­கவும் ஜெனரல் வி.கே.சிங் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்­கைக்கு இந்­திய அமை­திப்­ப­டையை அனுப்­பி­யது தவ­றா­ன­தொரு முடிவு என்ற கருத்து, இந்தியாவின் அர­சியல் மற்றும் பாது­காப்புத் துறை சார்ந்­த­வர்­களால் அவ்­வப்­போது சுட்­டிக்­காட்­டப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது.

நட்வர் சிங்
சில மாதங்­க­ளுக்கு முன்னர், இந்­தி­யாவின் முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் நட்வர் சிங் எழுதியிருந்த சுய­ச­ரி­தை­யிலும், அது தொடர்­பாக இந்­திய தொலைக்­காட்­சிக்கு வழங்­கி­யி­ருந்த பேட்டி ஒன்­றிலும் இது­கு­றித்து சர்ச்­சைக்­கு­ரிய தக­வல்­களை வெளி­யிட்­டி­ருந்தார்.

imagesஇந்­தியப் படை­களை அனுப்பும் முடிவை கொழும்பில் வைத்தே ராஜீவ்­காந்தி எடுத்தார் என்றும், அதுகுறித்து அமைச்­ச­ர­வை­யி­டமோ அல்­லது வேறு எவ­ரி­டமோ கலந்­து­ரை­யா­டவோ அனு­மதி பெறவோ இல்லை என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

நட்வர் சிங் வெளி­யிட்ட இந்த தக­வல்கள் புது­டில்­லியில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

அதற்குப் பின்னர், இப்­போது இந்­தி­யாவின் முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியும், தற்­போது வெளி­வி­வ­கார இணை அமைச்­ச­ராக இருப்­ப­வ­ரு­மான ஜெனரல் வி.கே.சிங் மீண்டும் இந்த விவ­கா­ரத்தைக் கிளம்பியிருக்­கி றார்.

இலங்­கைக்கு இந்­தியப் படை­களை அனுப்ப எடுத்த முடிவை கொள்கை ரீதி­யான ஒரு தவறு என்றும், அது இரா­ணுவ மட்­டத்தில் எடுக்­கப்­பட்ட முடிவு அல்ல, இரு நாட்டு அர­சாங்­கங்­களும் எடுத்த முடிவு என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

ராய்ப்­பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் தெரி­வித்­தி­ருந்த இந்தக் கருத்­து­களில் ஒன்றும் புதிய விடயம் உள்­ள­டங்­கி­யி­ருக்­க­வில்லை.

அதா­வது, இலங்­கைக்கு இந்­தியப் படை­களை அனுப்­பி­யதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறத்­தக்க நிலையில் இப்­போது இந்­தி­யாவில் யாரு­மில்லை என்றே கூற வேண்டும்.

காங்­கிரஸ் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் கூட அதே­நி­லையில் தான் இருக்­கின்­றனர்.

எனவே, ஜெனரல் வி.கே.சிங் இவ்வாறு கூறி­யி­ருப்­பது ஆச்­ச­ரி­ய­மா­ன­தல்ல.

எனினும், அவர் கூறி­யுள்ள இரண்டு விட­யங்கள் முக்­கி­ய­மா­னவை.

முத­லா­வது, விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை, இந்­திய அமை­திப்­ப­டை­யினர் பல­முறை அழிக்கும் அள­வுக்கு நெருங்­கி­யி­ருந்­தனர் என்றும், ஆனால், அவரை தப்பிச் செல்ல வழி விடு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இரண்­டா­வது, தாமே பயிற்சி அளித்­த­வர்­க­ளுடன் போரி­டு­கின்ற சங்­க­ட­மான நிலைக்கு உள்­ளா­கி­ய­தா­கவும் ஜெனரல் வி.கே.சிங் குறிப்­பிட்­டுள் ளார்.

இந்த இரண்டு விட­யங்­களும் தற்­போ­தைய தரு­ணத்­திலும் சர்ச்­சைக்­கு­ரி­ய­வை­யா­கவே உள்­ளன.

அதா­வது, இந்­தியப் படை­யினர் விடு­தலைப் புலி­களின் தலை­மையை அழிக்கும் இலக்­குடன் செயற்படவில்லை என்ற கருத்து சரி­யா­னதா என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது.

ஏனென்றால், பிர­பா­க­ரனை பல­முறை அழிக்கும் அள­வுக்கு நெருங்­கிய போதும், அவரைத் தப்­பிக்க விடு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­த­தாக ஜெனரல் வி.கே.சிங் கூறி­யி­ருக்­கிறார்.

விடு­தலைப் புலி­களின் தலை­மையை அழிக்கும் நோக்­கு­ட­னேயே, இந்­தியப் படை­யினர் ஆரம்­பத்தில் இருந்து இறுதி வரையில் முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தனர் என்­பதே உண்மை.

பிர­பா­கரன் அழிக்­கப்­பட்டு விட்டால், புலிகள் உள்­ளிட்ட எல்லா இயக்­கங்­க­ளையும், தனது வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்­பது இந்­தி­யா வின் கருத்­தாக இருந்­தது.

தமது உடன்­பாட்டை பிர­பா­கரன் மட்­டுமே ஏற்க மறுத்து வந்­ததால், அவர் மீது இந்­தி­யா­வுக்கு கடுமையான கோபம் இருந்து வந்­தது.

இதனால், விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் தொடங்­கி­யதும், கொக்­கு­விலில் விடு­தலைப் புலிகளின் தலைவர் வே. பிர­பா­கரன் தங்­கி­யி­ருந்த வீட்டை குறி­வைத்து, இந்­திய இரா­ணு­வத்தின் பரா கொமாண்­டோக்கள் தரை­யி­றக்­கப்­பட்­டனர்.

ஆனால், யாழ். மருத்­துவ பீட மைதா­னத்தில் தரை­யி­றக்­கப்­பட்ட இந்­திய இரா­ணுவ பரா கொமாண்­டோக்­களின் அணி, விடு­தலைப் புலி­களால் நாச­மா­க்கப்­பட்­டது.

அதில் 29 பரா கொமாண்­டோக்கள் கொல்­லப்­பட்­டனர்.

இது இந்­தியப் படைகள் தமது வர­லாற்றில் சந்­தித்த மோச­மான தோல்­வி­களில் ஒன்­றாக இன்­றைக்கும் கரு­தப்­ப­டு­கி­றது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

அதற்குப் பின்னர், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை உயி­ரு­டனோ, சட­ல­மா­கவோ கைப்பற்­று­வ­தற்கு, இந்­தியப் படைகள் பெரும் தேடு­தல்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். வடக்கு மாகாணம் முழு­வ­திலும், பிர­பா­க­ரனைத் தேடி வேட்­டைகள் நடத்­தப்­பட்­டன.

இறு­தியில் அவர் மண­லாறு காட்­டுக்குள் ஒளிந்­தி­ருப்­ப­தான தகவல் கிடைத்­த ­போது, அந்தப் பகு­தியைச் சுற்­றி­ வ­ளைத் துக் கொண்ட, இந்­தியப் படை­யினர், பல­முறை காடுகள் மீது தாக்­குதல் நடவடிக்கைகளை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

பிர­பா­கரன் மண­லாறுக் காட்­டுக்குள் தான் மறைந்­தி­ருக்­கிறார் என்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொண்ட பின்னர், அந்தப் பகு­தியை இறுக்­க­மான முற்­று­கைக்குள் இந்­தியப் படை­யினர் வைத்­தி­ருந்­ததும், காடுகளுக்குள், 500 கிலோ எடை கொண்ட குண்­டு­களை ஹெலி­கொப்­டர்­களில் இருந்து வீசி­யதும் மறுக்க முடி­யாத விட­யங்கள்.

இவை­யெல்லாம், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கிற்­கான மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களே தவிர, அவரைத் தப்­பிக்க விட வேண்டும் என்ற கோணத்தில் மேற்­கொள்­ளப்­பட்­ட­வை­யல்ல.

 

ஒரு கட்­டத்தில், பிர­பா­கரன் இறந்து விட்டார் என்று கூட இந்­தியா செய்தி வெளி­யிட்­டது.

விடு­தலைப் புலி­களைப் பல­வீ­னப்­ப­டுத்தும் ஒரு உள­வியல் உத்­தி­யா­கவே அந்த வதந்­தி­யையும் இந்­தியா பரப்­பி­யது.

எனினும், விடு­தலைப் புலி­களின் தலை­வரை இந்­தி­யப்­ப­டை­களால் எதுவும் செய்ய முடி­யாமல் போனது. அது இந்­தி­யாவின் தோல்­வி­யா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

ஜெனரல் வி.கே.சிங், இந்­தியப் படை­களின் இலங்கை நட­வ­டிக்­கை­களை அர­சியல் மட்­டத்­தி­லான கொள்கை ரீதி­யான தோல்­வி­யாக வெளிப்­ப­டுத்த முனை­கி­றாரே தவிர, அதனை இந்­திய இரா­ணு­வத்­துக்கு ஏற்­பட்ட தோல்­வி­யாக ஏற்றுக் கொள்ளத் தயா­ராக இல்லை.

விடு­தலைப் புலி­களின் தலை­மையை அழிக்கும்- அல்­லது விடு­தலைப் புலி­களை அழிக்கும் இலக்­கினை நிறை­வேற்ற முடி­யாத நிலையில் தான், இந்­தி­யப்­ப­டைகள் 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் திரும்பிச் செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

ஆனால் ஜெனரல் வி.கே.சிங் அதனை மறைக்கப் பார்க்­கிறார்.

இந்­தியப் படை­களால் முடி­யாத விடு­தலைப் புலி­களின் தலை­மையை அழிக்கும் காரி­யத்தை, இலங்கைப் படைகள் நிறை­வேற்­றி­யதை அவரால் ஏற்றுக் கொள்ள முடி­ய­வில்லை என்று தெரி­கி­றது.

அதனால் தான், பல­முறை பிர­பா­க­ரனை நெருங்­கினோம், ஆனாலும் அவரைத் தப்­பிக்க வழி­வி­டு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்தால், அவர் தப்பிச் சென்றார் என்று, தமது தயவில் தான் பிர­பா­கரன் உயிர்­தப்­பி­யது போலவும், கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

எனினும், பிர­பா­க­ரனைத் தப்­பிக்க வழி விடு­மாறு உத்­த­ர­விட்­டி­ருந்­தது யார் என்­பதை, ஜெனரல் வி.கே.சிங் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

அதே­வேளை, அவ­ரது இந்தக் கருத்தை, இந்­திய அமை­திப்­ப­டையின் புல­னாய்வு நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பாக இருந்­த­வ­ரான, கேணல் ரமணி ஹரி­கரன் கூட ஏற்றுக் கொள்­ள­வில்லை.

தனக்குத் தெரிந்­த­வ­ரையில், பிர­பா­க­ரனை ஒரு ஒரு­முறை தான் இந்­தியப் படை­யினர் நெருங்­கி­ய­தா­கவும், ஆனால் அப்­போது அவர் தப்பிச் சென்று விட்­ட­தா­கவும், கேணல் ஹரி­கரன் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

கேணல் ஹரி­க­ரனைப் பொறுத்­த­வ­ரையில், இரா­ணு­வத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சுதந்­தி­ர­மாக இயக்கும் ஒரு­வ­ரா­கவே இருக்­கிறார்.

ஆனால் ஜெனரல் வி.கே.சிங் பா.ஜ.கவில் இணைந்து இணை அமைச்­ச­ரா­கவும் பதவி வகிக்­கிறார்.

அவர், இந்த விவ­கா­ரத்தை வைத்து, காங்­கிரஸ் அர­சாங்­கத்தின் மீது பழி போடு­வ­தற்கே முயற்­சித்­தி­ருப்­ப­தாகத் தெரி­கி­றது.

இந்த விட­யத்தில் மட்­டு­மன்றி, இன்­னொரு விட­யத்­திலும் அதனை உணர முடி­கி­றது.

இந்­திய அமை­திப்­ப­டை­யினர் இலங்­கையில் போய் தாமே பயிற்சி அளித்­த­வர்­க­ளுடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜெனரல் வி.கே.சிங் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இப்போதைய நிலையில், தாம் விடுதலைப் புலிகளுக்கோ, அல்லது ஏனைய தமிழ் அமைப்புகளுக்கோ ஆயுதங்களை வழங்கியதையோ, பயிற்சி அளித்ததையோ ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இல்லை.

இருந்தாலும், ஒரு வெளிவிவகார இணை அமைச்சராக இருந்து கொண்டே, தாமே பயிற்சி அளித்தவர்களுடன் இந்திய இராணுவத்தினர் மோத வேண்டிய சங்கடமான நிலை இலங்கையில் ஏற்பட்டதாக, கூறியிருக்கிறார் ஜெனரல் வி.கே.சிங்.

இதுவும் கூட காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது பழிபோட்டு விடலாம் என்ற வகையில் தான் கூறப்பட்டிருக்கிறது.

இலங்கைக்கு இந்தியப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனாலும், அதனை அரசியலாக்கும் போக்கு, மட்டும் இன்னமும் மாறவில்லை.

இதனை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஜெனரல் வி.கே.சிங்.

Share.
Leave A Reply

Exit mobile version