சென்னை: நாயகர்களுடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை படத்துக்கான விளம்பரம் என நினைத்து, தன் வேலையை மட்டுமே காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகை பிரியா ஆனந்த்.
கடந்த 2009ம் ஆண்டு வாமனன் படத்தில் ஜெய் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். தமிழ் சரளமாக பேசும் பிரியா ஆனந்த், பன்னிரண்டுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் கௌதம் கார்த்தி ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ள வை ராஜா வை படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார் பிரியா ஆனந்த். அதில் அவர் கூறியிருப்பதாவது21-1429605928-vai-raja-vai-11-600
வித்தியாசமான படம்
‘நான் இதுவரை நடித்த படங்களைவிட கொஞ்சம் வித்தியாசமானது ‘வை ராஜா வை’. நாயகன் – நாயகி காதல், காதலில் வரும் பிரச்சினை என்று படத்தின் கதை வழக்கம் போல நகராது. நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்து தமிழில் இந்த மாதிரி யான கதைக்களத்தில் வெளிவரும் முதல் படம் என்று நினைக்கிறேன்.
ரஜினியின் மகள் இயக்கத்தில் நடித்த அனுபவம்…பார்க்கத்தான் அவங்க அமைதி. படப்பிடிப்பு தளத்தில் வந்து பாருங்கள். வேலையில் கரெக்டா இருப்பார். படப்பிடிப்பு படுவேகமாக போகும். யாரும் அதிகமாக பேச மாட்டாங்க. காட்சி நினைத்த மாதிரி வரும் வரை ஐஸ்வர்யா தனுஷ் விடமாட்டார்.

வித்தியாசமான பெண் இயக்குநர்…நான் படப்பிடிப்பு தளத்தில் மிக அமைதியாக யாரையும் கிண்டல் பண்ணாமல் நடித்த முதல் படம் இதுதான். இதுவரை நான் பார்த்து பழகிய பெண் இயக்குநர்களில் மிகவும் வித்தியாசமானவர் ஐஸ்வர்யா தனுஷ்.
ரஜினி ரசிகை…
நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகை. ‘எதிர் நீச்சல்’ படத்தில் தமிழ் பேசுற பொண்ணுதான் நாயகியாக வேண்டும் என்றார்கள். அந்த வாய்ப்பு கிடைத்தது. அதுபோலத்தான் ‘வை ராஜா வை’ படத்துக்கும் நடந்தது. நல்ல சென்னை தமிழ் பேசக்கூடிய பெண் என்பதால் வாய்ப்பு கிடைத்தது. கதை பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்.
தமிழ் தெரிந்த நாயகி…
நான் மட்டுமல்ல, தமிழ் பேசத்தெரிந்த நிறைய நாயகிகள் இங்கு இருக்கிறார்கள். அந்த நோக்கத்தில் தேடினால் கட்டாயம் கிடைப்பார்கள்.
நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்கள்… வர்ற படமெல்லாம் அது மாதிரியே வந்து, நானா நடிக்காமல் இருக்கிறேன்? தவிர, பாடல் காட்சிகளில் மட்டுமே வந்துவிட்டு போவது மாதிரி இதுவரை எந்த படத்திலும் நான் நடித்ததில்லை. அதனால், நாயகிகளின் நடிப் புக்கு முக்கியத்துவம் உள்ள படங் கள் நிறைய வந்தால், அதில் கண்டிப்பாக என்னை பார்க்கலாம்.


மீண்டும் ஆனந்த ஷங்கர் இயக்கத்தில்…

விக்ரம்தான் நாயகன். அவரது நடிப்பை படப்பிடிப்பு தளத்தில் நேரில் பார்க்க ஆவலாக இருக் கிறேன். விரைவில் படப் பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஆனந்த் ஷங்கர் அற்புதமான இயக்குநர். இந்தப் படத்தின் திரைக்கதைகூட வெகு சிறப்பாக இருக்கும்.
திரையுலக வளர்ச்சி…
‘வாமனன்’ படத்தின்போது எனக்கு எதுவுமே தெரியாது. அதில் நடிக்கும்போதுதான் திரையுலகம் எப்படி இருக்கும், எப்படி காட்சிப்படுத்துவார்கள் போன்ற விஷயங்களை படிக்க ஆரம்பித்தேன். இப்போது ஓரளவு எல்லாம் தெரியும். ஒரு படப்பிடிப்புக்கு போனால் எதற்காக இந்தக் காட்சி எடுக்கிறார்கள், ஏன் இப்படி அமைக்கிறார்கள் என டக்கென்று புரிந்துவிடுகிறது.
கிசுகிசு…
நானும் எவ்வளவு நாயகர்களைத்தான் காதலிக்க முடியும்? படப்பிடிப்பின்போது நாயகனுடன் பேசாமல் இருக்க முடியாது. பேசினால் காதல், ஒன்றாக சாப்பிட்டால் காதல் என்று கதைகட்டுகிறார்கள்.
வேலையைக் காதலிக்கிறேன்…
‘நாயகனுடன் காதல்’ வகை கிசுகிசுக்கள் போரடிக்கின்றன. அதில்கூட புதுமையாக யோசிக்கலாமே..! சரி, இதெல்லாம் படத்துக்கான விளம்பரம் என்று நினைத்து விட்டுவிட்டேன். என்னைப் பொறுத்தவரை, என் வேலையை மட்டுமே தீவிரமாக காதலிக்கிறேன்.
Share.
Leave A Reply

Exit mobile version