தலைமன்னாரில் இருந்து நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னாரில் இருந்து நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் தோட்டவெளி புகையிரதப்பாதையூடாக பயணித்த போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான என்.ஜெரால் காட்டர்(வயது-35) எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

rail_accident_mannar_01தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு பின் பகுதியில் அமைந்துள்ள புகையிரத பாதையில் படுத்து கிடந்த போதே குறித்த குடும்பஸ்தர் மீது புகையிரதம் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனைகளின் மூலம் தெரிய வருகின்றது.

இன்று(20) திங்கட்கிழமை காலை புகையிரத பாதையில் சடலம் ஒன்று கிடப்பை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர்.

இதன் போதே குறித்த விபத்து இடம் பெற்ற இடத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் உள்ள வீட்டைச் சேர்ந்த என்.ஜெரால் காட்டர்(வயது-35) என தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதோடு மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version