உலகில் பல அழகான வசிப்பிடங்கள் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.
எம் நாட்டின் மலையகத்தைப் போன்று பார்வைக்கு அழகாகத் தோன்றும் அவை, ஆபத்தானவையும் கூட.
அழகான, ஆபத்தான இடங்களையும் மனிதர்கள் தமது வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
இது பிலிப்பைன்ஸின் ஓகஷிமா எனும் பகுதியாகும். நடுக்கடலில் மலையிடையே சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆபத்தான ஒரு எரிமலையின் வாயில் இந்த அழகிய நகரம் அமைந்துள்ளது.
மலைப்பாறைக்குப் பின்னால் மறைந்திருக்கும் இந்தக் குட்டி நகரம் கிரேக்கத்தின் கடலோரம் அமைந்துள்ள ஓர் தீவாகும்
இராட்சத தேன்கூடு போன்ற வடிவில் தோன்றும் இந்த குகை வாய்ப் பகுதியிலும் மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் சன்ஸ்கார் பகுதியாகும் இது.
கிரீன்லாந்தின் இசோர்டோக் எனும் பனிபடர் பகுதி இது
பரோ தீவின் இந்த அழகிய பகுதியில் 16 பேர் மாத்திரமே வசிக்கின்றனர்.
உலகின் வறண்ட பகுதிகளில் Huacachina எனும் இந்தப் பகுதியும் ஒன்று. பாலையின் மத்தியில் பசுமையான மரங்களும் ஹோட்டல்களும் கடைகளும் அமைந்திருப்பது அதிசயத் தோற்றம் தான்!
மாலியிலுள்ள பண்டியகரா பகுதி இது. Dogon மக்களின் வசிப்பிடங்கள் இவை.
விசித்திரக் கதைகளிலும் டிஸ்னி படங்களிலும் வரும் அழகிய கிராமங்களைப் போன்று உள்ள இப்பகுதி நோர்வேயில் உள்ள Aurlandsfjord எனும் பகுதியாகும். இது ஒரு அழகிய நேரான பள்ளத்தாக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.