செர்னோபில்: காக்காவை ஏமாற்றி வடையைத் தூக்கிட்டு போன நரியினை உங்களுக்கு தெரியும். சாண்ட்விச் போடும் நரியினை உங்களுக்குத் தெரியுமா? செர்னோபில் பகுதியில் நீங்கள் அந்த நரியினைப் பார்க்கலாம்.
உக்ரைனில் சாண்ட்விச் செய்யும் அந்த நரியின் வீடியோதான் தற்போது “தீ “யாக பரவி வருகின்றது.
கிட்டதட்ட 10 லட்சத்திற்கும் மேல் இந்த வீடியோவினைப் பார்வையிட்டுள்ளனராம் பேஸ்புக், டுவிட்டரில். கொஞ்சம் கூட மனிதர்களிடம் பயமில்லாமல் இறைச்சியையும், பிரெட்டினையும் சேர்த்து சாண்ட்விச்சினை உருவாக்குகின்றது இந்த நரி.
1986 ஆம் ஆண்டின் செர்னோபில் அணு உலை வெடிப்புக்குப் பின்னர் மனிதர்களால் புறக்கணிப்பட்டது அப்பகுதி.
அப்பகுதியில் தற்போது அதிகளவிலான நரிகளும், ஓநாய்களும், கரடிகளும்தன் சுற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.