யாழ்.தெல்லிப்பழைப்  பிரதேசத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரைக் கட்டிப் பிடித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குடும்பஸ்தரை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் ஜீவராணி கறுப்பையா நேற்று செவ்வாய்க்கிழமை (28.04.2015) உத்தரவிட்டார்.

கடந்த 24 ஆம் திகதி குறித்த பெண்ணின் வீட்டுக்கு வீட்டின் பின்பக்கமாகச் சென்ற இளைஞன் குளித்துக் கொண்டிருந்த பெண்ணைக் கட்டிப் பிடித்துள்ளார்.

அப் பெண் உரத்துச் சத்தமிடவே குறித்த நபர் மதில் ஏறிப் பாய்ந்து தப்பிச் சென்றார்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்;ட தெல்லிப்பழைப் பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி இவ்வாறு விளக்க மறியல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version