மத்திய கால இந்தியாவில், ஒரு இந்துப் பெண்ணின் கணவன் இறந்த பிறகு, அவள் அவனுடன் உடன்கட்டை ஏறும் வழக்கமானது இந்தியாவைக் கைப்பற்றி ஆண்ட ஐரோப்பியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், இந்து மதம் குறித்தான தவறான புரிதல்களையும் அவர்களுக்கு ஏற்படுத்தியது.
ஆனால் “சதி” அல்லது ஜவுஹார் (Jauhar) என்னும் இந்த வழக்கம் இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முன் ஒரு பொது வழக்கமாக இருந்ததில்லை.
இந்துக்களிடையே உடன்கட்டை ஏறும் வழக்கம் மிக, மிக அபூர்வமானதாகவே நிகழ்ந்தது (தென்னிந்தியாவின் பெரும் அரசனான ராஜராஜ சோழனின் அன்னையார் அவ்வாறு உடன்கட்டை ஏறியவர் எனக் காண்கிறோம்).
Worshipful insignia in memory of brave Rajput women who committed Jauhar
Worshipful insignia in memory of brave Rajput women who committed Jauhar
இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்துப் பெண்கள் நெருப்பில் குதித்துத் தங்களின் உயிரைப் போக்கிக் கொள்ளும் ஜவுஹார் என்னும் கொடிய வழக்கத்தை ஆரம்பித்தனர்.
இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு துவங்கிய காலம் தொட்டு (634) இந்துப் பெண்களின் நிலைமை படு மோசமான நிலையை அடைந்தது என்பதனை முந்தைய பகுதிகளில் கண்டிருக்கிறோம்.
காஃபிர்களைக் கொன்று அவர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்த பின்னர், காஃபிர்களின் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிப்பதனை அமைதிமார்க்கக் கோட்பாடான குரான் அங்கீகரிக்கிறது.
634-ஆம் வருடம் துவங்கி, பின்-காசிமினால் 712-ஆம் வருடம் வெற்றி கொள்ளப்படும் வரையில் இஸ்லாமியப்படைகள் சிந்து சமவெளியைக் கைப்பற்றுவதற்கு எட்டு முறைகள் படையெடுத்து தோல்வி கண்டார்கள்.
வெற்றி கண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களே தோல்வி கண்டவர்களின் பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்கள்.
பின்-காசிம் சிந்து சமவெளியை ஆண்ட மூன்று வருடங்களில் பல ஆயிரக்கணக்கான இந்துப் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு போனான்.
அது போலவே கஜினி முகமது ஐந்து இலட்சம் (5,00,000) அடிமைகளை 1001-02 ஆம் வருடப் படையெடுப்பில் பிடித்துக் கொண்டு போனான். அதன் பின்னர் நடந்த படையெடுப்புகள் இன்னும் பல இலட்சம் பேர்களை அடிமைகளாக்கியது.
இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார்.
ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து கொண்டார்கள்.
இதே வழக்கம் பின்னர் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை நடந்த 1947-ஆம் வருடமும் நடந்ததினைக் காண்கிறோம்.
தங்களின் கணவன்மார்கள் இஸ்லாமிய குண்டர்களால் கொலை செய்யப்பட்ட பின்னர், அவர்களிடமிருந்து சிக்காமல் தப்புவதற்கென பல இந்து மற்றும் சீக்கியப் பெண்கள் தங்களைத் தாங்களே தீயிட்டு எரித்துக் கொண்டார்கள். இன்னும் சிலர் கிணறுகளில் குதித்தும், விஷமருந்தியும் இறந்ததைக் காண்கிறோம்.
அக்பர் மட்டுமே அந்த வழக்கத்தைக் குறித்து விமர்சிக்கிறார். இருந்தாலும் அந்த வழக்கத்தை அதனைத் தடுக்க முயற்சிகள் எதுவும் அவரால் எடுக்கப்படவில்லை.
“கட்டாயமாக எரிக்கப்படும் பெண்ணைத் தடுக்க மட்டுமே” அவர் முயற்சித்ததாக அக்பர்-நாமா கூறுகிறது.
இருப்பினும் உடன்கட்டை ஏறும் “சதி” வழக்கமானது இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் போது மிகவும் மோசமடைந்தது.
இஸ்லாமிய ஆக்கிரமிப்பு இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கையில் இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்ற இப்ன்-பதூதா, இந்துக்கள் மத்தியில் “சதி” எங்கும் கட்டாயமாக நிகழ்த்தப்படவில்லை என்றே குறிக்கிறார்.
கணவனை இழந்த விதவைப் பெண் விரும்பினால் மட்டுமே “சதி” கடைபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் சொல்கிறார் (“The burning of wife after her husband’s death is regarded by them as commendable act, but not compulsory….she is not forced to burn herself”). இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் பல்லாயிரக் கணக்கான இந்து ஆண்கள் கொல்லப்பட்டபோது, அவர்களின் மனைவிமார்கள் தங்களின் இறந்த கணவன்மார்கள் மீது கொண்ட அபிமானத்துடன் உடன்கட்டை ஏறினார்கள்.
உடன்கட்டை ஏறும் வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் காலங்களில் அதிகரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். கணவனை இழந்த இளம்பெண் மறுமணம் செய்து கொள்வதற்கு மத்தியகால இந்தியாவில் இடமில்லை.
எனவே அவ்வாறான இளம்பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்படுவதற்கு குறிவைக்கப்பட்டார்கள். எனவே அதனைத் தவிர்க்கவும் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்.
இந்துக்களை கவர்ந்து செல்வதும் பின்னர் அவர்களை அடிமைச் சந்தையில் விற்பதுவும் இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து நடந்த ஒரு விஷயம் என்பதினை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் மலபார் பகுதியில் மிகக் குறைந்த அளவே இருந்த “மாப்ளா” முஸ்லிம்கள் இந்துப் பெண்களையும், குழந்தைகளையும் தூக்கிச் சென்று அவர்களை ஐரோப்பிய வியாபாரிகளுக்கு அடிமைகளாக விற்பனை செய்வதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார்கள்.
முக்கியமாக கொச்சியின் டச்சுக் கோட்டையிலிருந்த ஐரோப்பியர்கள் “மாப்ளா”க்களிடமிருந்து அடிமைகளாக பிடித்து வரப்பட்ட இந்துப் பெண்கள் மற்றும் குழந்தைகளை வாங்கினார்கள். இது போன்ற காரணங்களே இந்து பெண்களை உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு இட்டுச் சென்றன.
(தொடரும்)
மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்