சுஷ்மா ராஜ்.. இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். பெங்களூர் பொண்ணு. தமிழ் சரளமாகப் பேசுகிறார். பேஷன் டிசைனிங் முடித்த கையோடு, தெலுங்குப் பட வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த தெலுங்குப் படங்களைப் பார்த்துவிட்டு, தனது ஹீரோயினாக்கிக் கொண்டார் விஜய் ஆன்டனி.
30-1430398501-sushma-s1-600
அசப்பில் அனுஷ்கா
இந்தியா பாகிஸ்தான் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்த சுஷ்மா ராஜைப் பார்த்த செய்தியாளர்கள், ‘நீங்க பார்க்கறதுக்கு அப்படியே அனுஷ்கா மாதிரியே இருக்கீங்க’ என்று சொல்ல, உச்சி குளிர்ந்து நன்றி சொன்னார்

முதல் டேக்கிலேயே
படத்தில் நடித்த அனுபவம் பற்றிக் கூறுகையில், “இந்தப் படத்தில் எனக்கு ஒரு தைரியமான பெண் கதாபாத்திரம். படத்தில் நானும் விஜய் ஆண்டனி சாரும் சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். நடிப்பில் முன் அனுபவம் இருந்ததால் அனைத்து காட்சிகளையும் முதல் டேக்கிலேயே முடித்தேன்.
நல்லா தமிழ் தெரியும்
தமிழ் எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் இப்படத்தில் நடிக்கும் பொழுது மொழி ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. எனினும் ஓரு நீதிமன்ற காட்சியில் சுத்த தமிழில் பேச மட்டும் கொஞ்சம் சிரமப்பட்டேன்.
நானே உடை வடிவமைத்தேன்
‘பலகோடி பெண்களில்’ என்ற பாடலுக்கு நானே உடைகளை வடிவமைத்தேன். அனைவரும் அப்பாடல்காட்சியை வெகுவாக பாராட்டினர். அனைவரும் என்னை அனுஷ்கா சாயலில் இருக்கிறேன் என்று சொல்வது மிகவும் நல்ல விஷயமாகாவே நான் பார்க்கிறேன்.
நாய் கடிச்சிருச்சிப்பா
“நாய்கள் என்றாலே எனக்கு பயம் படத்தின் ஒரு பெண்ணுக்கு பேயோட்டும் காட்சி படமாக்கும்போது நாய் என் மீது தாவி என்னைக் கடிதத்தில் நான் கீழே விழுந்துவிட்டேன். மேலும் இப்படத்தில் நடித்ததை மறக்கவே முடியாத அளவுக்கு மாற்றியது இந்த சம்பவம்.
நகைச்சுவை மிக்க விஜய் ஆன்டனி
இப்படத்தில் மனோபாலா, எம்எஸ் பாஸ்கர் ஆகியோருடன் நடித்தது மறக்கவே முடியாது அவர்களிடம் ஸ்பாட்டிலேயே எப்படி நடிப்பது என்றுக் கற்றுக்கொண்டேன். மிகவும் நல்ல மனிதர் விஜய் ஆண்டனி சார். யாரிடமும் ஒரு வார்த்தை அதிகமாய் பேசமாட்டார், நகைச்சுவை உணர்வு மிக்கவர். ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்,” என்றார்.

ஓ காதல் கண்மணி – பறந்து செல்ல வா பாடல் வீடியோ/ OK Kanmani – Parandhu Sella Vaa Song Promo

எனக்குள் ஒருவன் – பூ அவிழும் பொழுது பாடல் வீடியோ!

இது என்ன மாயம் – இரவாக நீ பாடல் டீஸர்!

Share.
Leave A Reply

Exit mobile version