தமிமீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, ஐந்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்து நீதிமன்றம் 19 மாதங்கள் தொடக்கம் 6 வருடங்களுக்கான சிறை தண்டனை விதித்துள்ளது.
நெதர்லாந்தின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

அவர்கள் ஐந்து பேரும் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டி வந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைவிதிக்கப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகளும் இருக்கின்ற நிலையில், அவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version