விளக்கு கம்பத்தின் ஓரம் இருக்கும் குப்பைத்தொட்டியில் பிறந்து சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தையை ஒரு இளம்பெண் தூக்கி வீசிவிட்டு செல்கிறார்.

சற்று நேரத்துக்கு பின்னர் அவ்வழியே செல்லும்  ஒருவர் அது தனது மகள் பிரசவித்த குழந்தை என்பதை அறியாமல் ஒரு பொட்டலம் போல் தனது கரங்களில் ஏந்திச் செல்கிறார்.

அங்கு பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் இதை உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக ஒளிபரப்புகின்றன. இதை கண்ட ஒரு வாலிபர் அந்த குழந்தைக்கு நான்தான் தந்தை என்று சொந்தம் கொண்டாடுகிறார்.
53fcc240-6692-4125-9f1e-9a4e39226c8a_S_secvpf
இதெல்லாம், நிறைய சினிமாக்களில் வந்த காட்சிபோல் தெரிந்தாலும் திரையில் தோன்றியபோது ஏற்படாத ஒரு இனம்புரியாத உணர்வு பிரேசில் நாட்டில் நடைபெற்ற இந்த உண்மை சம்பவத்தை தெரிந்துகொள்ளும்போது அனைவருக்கும் ஏற்படுவதில் வியப்பில்லை.

பிரேசிலை சேர்ந்த மோய்செஸ் பெரேய்ரியா டெக்ஸேய்ரியா (Moises Pereira Teixeira) என்பவர் ஒரு இளம்பெண்ணை காதலித்தார்.

அந்தப் பெண் 4 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து, அவரை உதறித்தள்ளிய காதலர், வேறொரு பெண்ணுடன் ஜாலியாக சுற்ற ஆரம்பித்தார்.

தனது கர்ப்பத்தை குடும்பத்தாருக்கு மறைத்துவந்த அந்த இளம்பெண், உச்சகட்ட பிரசவ வலியில் வீட்டின் குளியலறைக்குள், கடுமையான வேதனையை பொறுத்துக் கொண்டு தனியாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

கத்திரிக்கோலால் தொப்புள் கொடியை துண்டித்த அடுத்த நிமிடமே அந்த குழந்தையை ஒரு டவலில் சுற்றி தெருவில் இறங்கி நடந்து வந்தவர், விளக்கு கம்பத்தின் அருகில் இருக்கும் ஒரு குப்பைத்தொட்டியில் குழந்தையை வீசிவிட்டு சென்றார்.

சுமார் அரை மணி நேரத்துக்கு பின்னர் அவ்வழியாக வந்த அந்தப் பெண்ணின் தந்தை, குழந்தையின் அழுகுரலை கேட்டு, டவலில் ஒரு பொட்டலம்போல் சுற்றப்பட்டு, குப்பைத்தொட்டியில் கிடந்த அந்தக் குழந்தை யாருடையது? என்பது தெரியாமலேயே வீட்டுக்கு தூக்கிச் சென்றார்.

இந்த காட்சிகள் எல்லாம் அருகாமையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. இந்த காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியானதும் அந்த குழந்தையின் தாய் தனது முன்னாள் காதலி என்பதை அறிந்த மோய்செஸ் பெரேய்ரியா டெக்ஸேய்ரியா…,

குழந்தையை வளர்க்கும் பொறுப்புக்கு உரிமை கோரி அது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரிக்கு தேடிவந்து, என் வாரிசை என்னிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இவரது விருப்பத்துக்கு பெற்றோரும், புதுத் தோழியும் ஒப்புதல் அளித்துள்ளனர். என் குழந்தையை நான் காப்பாற்றிக் கொள்வேன்.

ஆனால், அதை தூக்கி தெருவில் வீசிவிட்டுச் சென்றவளுக்கு தகுந்த தண்டனை என்ன? என்பதை போலீசும், சட்டமும்தான் முடிஉவு செய்ய வேண்டும் என மோய்செஸ் பெரேய்ரியா டெக்ஸேய்ரியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version