பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கத்தரீன் தம்பதிக்கு புதிதாக பிறந்த குழந்தையான இளவரசி சார்லொட் எலிஸபெத் டயானா, தனது 10 ஆவது வயதில் எவ்வாறு இருப்பார் என்பதை வெளிப்படுத்தும் உருவப்படமொன்றை அமெரிக்க ஓவிய நிபுணரான ஜோ முல்லின்ஸ் பிந்திய கணினி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
இளவரசர் வில்லியம் மற்றும் கத்தரீனது புகைப்படங்களை தீவிர ஆராய்ச்சிக்குட்படுத்திய பின்னரே புதிய இளவரசியின் உருவப்படத்தை ஜோ முல்லின்ஸ் வரைந்துள்ளார்.