யாழ். ஓட்டுமட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 40 வயதுடைய சந்தேகநபர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியை வாளால் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படும்  இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஓட்டுமட பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்பில் நடைபெற இருந்த திருமண சடங்கு ஒன்றுக்கு செல்வதற்காக 13 வயது சிறுமியை தாவடியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றுள்ளனர்.

சிறுமி தனது வீட்டில் உள்ள செல்ல பிராணிக்கு சாப்பாடு வைப்பதற்காக தினமும் தாவடியில் இருந்து ஓட்டுமடத்தில் உள்ள தனது வீட்டுக்கு துவிச்சக்கர வண்டியில் தனியாக சென்று வந்துள்ளார்.

அதனை அவதானித்த நபொருவர் அவரைப் பின் தொடர்ந்து ஓட்டுமட வீட்டுக்கு சென்று துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார்.

அதையடுத்து சிறுமி கூக்குரல் எழுப்ப குறித்த நபர் எங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

அது தொடர்பில் கொழும்பில் இருந்து வந்த பெற்றோருக்கு சிறுமி தெரிவித்ததை அடுத்து, சந்தேகநபரின் வீட்டுக்கு சிறுமியின் பெற்றோர் சென்று வாய் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை அடுத்து துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டார் என சந்தேகிக்கப்படும் நபரின் இரு மகன்களும் சிறுமியை வாளால் வெட்டி காயப்படுத்தினார்கள்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் யாழ் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் பிரகாரம் மூவரையும் பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version