பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கத்தரீன் தம்பதிக்கு புதிதாக பிறந்த புதல்வியான இளவரசி சார்லொட்டை, அவரது பூட்டியான எலிஸபெத் மகாராணியார் வழமையான பூட்டிமார் போன்று பராமரித்தால் எவ்வாறு இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அரச குடும்ப அங்கத்தவர்கள் போன்ற தோற்றத்தைக் கொண்ட நடிகர்களைப் பயன்படுத்தி எடுத்து அந்நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான அலிஸன் ஜக்ஸன் வெளியிட்டுள்ளார்.
எலிஸபெத் மகாராணியார் சின்னஞ்சிறு இளவரசி சார்லொட்டிற்கு உள்ளாடைத் துணியை மாற்றுவது, போத்தல் பாலைப் புகட்டுவது போன்ற காட்சிகளை இந்த புகைப்படங்கள் உள்ளடக்கியுள்ளன.
