பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் சனிக்கிழமை (09) நண்பகல் வடமாகாண சபைக்குச் சொந்தமான பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிந்த ஒருவர் பலியாகியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ், முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கனகசபாபதி அருளானந்தம் (வயது 61) என்பவரை மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் திடீரென திருப்ப முற்பட்டமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்றவுடன், பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹாட்லி கல்லூரியின் முன்னாள் உபஅதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

pointpatro_acci_01

Share.
Leave A Reply

Exit mobile version