வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதியில் கொத்தத்துறையில் ஆள்நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் திங்கட்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயிலடியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரி (வயது 34) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

கழுத்தில் வெட்டுக்காயம் காணப்படுவதுடன், சடலத்தின் அருகில் அவரது ஆடைகள், பொருட்கள் அடங்கிய பயணப் பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது. அருகில் நைலோன் கயிறும் காணப்படுகின்றது.

இவரது கணவன் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் இறந்துள்ளார். இதன்பின்னர் அதேயிடத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை இவர் காதலித்து வந்துள்ளார்.

இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் இவர்களை ஞாயிற்றுக்கிழமை (10) கண்டுபிடித்த உறவினர்கள், இருவரையும் எச்சரிக்கை செய்து, பிரித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (11) பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர்.

pen-1

Share.
Leave A Reply

Exit mobile version