நஸ்ரியா தமிழில் நேரம், ராஜாராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் நஸ்ரியா சினிமாவில் நடிக்கவில்லை.

பஹத் பாசில் மலையாளத்தில் தற்போது முன்னணி நடிகராக இருக்கிறார். இவரும் ஆண்ட்ரியாவும் ‘அன்னயும் ரசூலும்’ என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

இப்படம் கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் ரசூல் என்ற கேரக்டரில் நடித்த பஹத் பாசிலை உருகி உருகி காதலிக்கும் காதலியாக ஆண்ட்ரியா நடித்து இருந்தார்.

சமீபத்தில் ஆண்ட்ரியாவிடம் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்ட போது ரசூல் கேரக்டரை போல் ஒருவர் கிடைத்தால் உடனடியாக திருமணம் செய்து கொள்வேன் என்று பதில் அளித்தார்.

பஹத் பாசிலை போல் கணவர் வேண்டும் என்பதை தான் மறைமுகமாக இப்படி அவர் சொன்னதாக மலையாள பட உலகினர் கிசு கிசுக்கின்றனர்.

இதன் மூலம் பஹத் பாசிலுடன் ஆண்ட்ரியாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி உள்ளன. இது நஸ்ரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதல் காட்சிகள் குறைவு: படக்குழு மீது கோபத்தில் இருக்கும் நயன்தாரா

NTLRG_150326184637000000
நயன்தாரா தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ‘மாஸ்’ படம் வருகிற 29-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இன்று இப்படக்குழு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, பத்திரிகையாளர்கள் படக்குழுவினரிடம் படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டனர்.

ஒரு கேள்வியில், இந்த படத்தில் சூர்யாவை பேயாக காட்டியுள்ளீர்கள். அதுபோல் நயன்தாராவும் இப்படத்தில் பேயாக நடித்திருக்கிறாரா? என்று ஒருவர் கேள்வி கேட்டார்.

அதற்கு, இயக்குனர் வெங்கட் பிரபு அப்படியெல்லாம் கிடையாது. சூர்யா இந்த படத்தில் பேயாக நடிக்கவில்லை. அது படத்தை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும் என்று மழுப்பலாக பதில் சொல்லி வந்தார்.

இடையில் குறுக்கிட்ட ஞானவேல்ராஜா, நயன்தாரா ஏற்கெனவே இந்த படத்தில் சூர்யாவுக்கும் தனக்கும் காதல் காட்சிகள் அதிகமாக வைக்கவில்லை என்று கோபத்தில் இருக்கிறார்.

இதில், நீங்கள் அவர் பேயாக நடிக்கிறாரா? இல்லையா? என்று கேள்வி கேட்டு அவரை மேலும் கோபப்படுத்தி விடாதீர்கள் என்று படபடவென்று ரகசியத்தை போட்டு உடைத்தார்.

காதல் காட்சிகளை குறைவாக வைத்துள்ளார்கள் என்று படக்குழு மீது கோபத்தில் இருப்பதால்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்குக்கூட நயன்தாரா வரவில்லையோ? என்ற சிறு கேள்வியும் பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version