சுவிசில் வேலையில்லாத நபர் ஒருவா் தனது குடும்பத்தை சேர்ந்த  3பேர் உட்பட, பக்கத்து வீட்டில் வசிப்பவர்  ஒருவருமாக   4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் Wuerenlingen(AG) கிராமத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்த நபர் ஒருவர் தனது மனைவியின் தாய், தந்தை, சகோதரன் ஆகிய மூன்று பேர் மற்றும் அண்டை வீட்டுக்காரர் ஒருவரையும் சுட்டுக்கொன்றார்.

மேலும் 36 வயதான இவர் தன்னை தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி தனது 3 குழந்தைகளுடன் பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வீடு (சொத்து )  சம்பந்தமாக குடும்பத்தில்  ஏற்பட்ட   பிரச்சனையிலேயே   இந்த சூட்டுச்சம்பவம் இடம்பெற்றதாக  தெரியவருகின்றது.

துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமம் இவரிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

131507-zS3v3PrChud1thsRjbf7rQ

Cinq morts dans un drame familial en Argovie

Share.
Leave A Reply

Exit mobile version