அமெரிக்கப் பல்கலைக் கழகமொன்றில் பட்டப்படிப்பு நெறியொன்றுக்கான இறுதிப் பரீட்சையில் மாணவ மாணவிகள் நிர்வாணமாக தோன்ற வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சான் டியாகோ நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கட்புலக் கலை பட்டப்படிப்புக்கான இறுதிப் பரீட்சையின்போது மாணவ மாணவிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், நிர்வாணமாக தோன்ற வேண்டுமாம்.

அப்போது மாணவர்களுடன் பேராசிரியரும் நிர்வாணமாக இருப்பாராம்.
288C4E3300000578-3076337-image-a-9_1431349227071இவ்வாறு நிர்வாணமாக தோன்றாவிட்டால் மாணவ மாணவிகள் சித்தி பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ரிக்கார்டோ டொமின்கஸ் என்பவரே இந்த விபரீத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த நிபந்தனைக்கு எதிராக மாணவியொருவரின் தாயார் ஒருவர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

“தனது மகளை இவ்வாறான நடவடிக்கைக்காக நான் எனது மகளை அப்பல்கலைக்கழகத்துக்கு அனுப்பவில்லை.

இது குறித்து பாடநெறி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விளக்கமளிக்கப்படவில்லை” என அத்தாயார் தெரிவித்துள்ளார்.

ஆனால், இத்திட்டம் கடந்த 11 வருடங்களாக அமுலில் இருப்பதாக பேராசிரியர் ரிக்கார்டோ டொமின்கஸ் தெரிவித்துள்ளார்.

“எனது வகுப்பிலுள்ளவர்கள் சித்தி பெறுவதற்கு நிர்வாணமாக தோன்ற வேண்டும்.

இது தொடர்பாக கடந்த 11 வருடங்களில் இதற்குமுன், ஒரு முறைப்பாடுகூட கிடைக்கவில்லை” என அவர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version