முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷீ வீரவன்ச போலியான பிறப்பு சான்றிதழையும், போலியான கடவுச் சீட்டையும் பயன்படுத்தியதாக, குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தது.

இதன் போது இந்த குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையை இரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த அறிக்கை மேலதிக விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போலியானமுறையில் தயாரிக்கப்பட்ட ராஜாங்க கடவுச் சீட்டை தயாரித்தமைக்காக சஷீ வீரவன்ச கடந்த பெப்ரவரி மாதம் 22ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும் பின்னர் அவர் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version