அன்பான தமிழ் மக்களே! எனக்காக யாரும்  இரங்க மாட்டீர்களா? நானும் இறந்து ஆறு வருடங்களாகிறது.  இதுவரை  யாரும்  எனக்காக  நினைவுச் சுடர்  ஏற்ற   முன்வராதது ஏன்??
முள்ளிவாய்காலில் மரணித்த எல்லோருக்கும்    நினைவுச் சுடர் ஏற்றி   நினைவு கூர்ந்தவர்கள்  என்னை முன்னிலைப்  படுத்த  மறந்ததேன்?
நான் இல்லாவிட்டால் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்திருக்குமா? நான்தானே முள்ளிவாய்க்கால் வரை மக்களை கூட்டிச் சென்றவன்.
நானும் முள்ளிவாய்க்காலில் மக்களோடு, மக்களாக தான்  இறந்தேன் (?) என்பதை தமிழ்மக்கள் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?

எனது  பிள்ளைகள் இறந்து விட்டதாக நம்புகின்றவர்கள் ஏன் நான் இறந்ததை மட்டும்  மறைக்கிறார்கள்? என்பது  எனக்கு புரியவில்லையே?

 

வெளிநாட்டில் இருப்பவர்கள்..,   என்னால் தான்  தாங்கள்  அங்கு சென்றதாகவும்,  தங்களின்  வசதியான  வாழ்கைக்கு   நான்தான்  மூலகாரணம்   என     தங்களுக்குள்  பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்..,

 வருடாவருடம் முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல்    நிகழ்வுகளை வெளிநாடுகளில் நடத்துகின்றவர்கள், ஏன்  எனக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கூட  ஏற்றி வைக்க முன்வரவில்லை?நான் யாருக்கு என்ன பாவம் செய்தன்?

இங்கு என்னோடு (மேலோகத்தில் ) இருக்கும் என் மகன் பாலச்சந்திரன் என்னை பார்த்து ஏளன சிரிப்பு சிரிக்கிறான்…

ஏன்ரா? என்று கேட்டேன்
104895

மெரீனாவில் கடகற்கரையில்   நடந்த  தமிழினப் படுகொலை நினைவேந்தல்  நிகழ்வில்  தன்னுடைய படத்தை  எல்லோரும்  கையில் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் உங்களுடைய படத்தை ஒருவர் கூட வைத்திருக்கவில்லையப்பா என கிண்டல் அடிக்கிறான்.

தன்னுடைய   அம்மாவும், அக்காவும்  எங்கே  இருக்கிறார்கள்   எனக் கேட்டு 6 வருடமாக அடம் பிடிக்கிறான்..

நான் என்ன பதிலை சொல்ல?  காணாமல்  போய் விட்டார்கள்  எனச் சொல்லியிருக்கிறன்.

பூலோகத்திலிருக்கும் தமிழ் மக்களே!

தயவு செய்து.. காணமல் போனோரை கண்டு பிடிக்கும் ஆணைக்குழுவிடம்  எனது மனைவியின் படததையும், மகளின் படத்தையும் காட்டி அவர்களை கண்டுபிடித்து  தருமாறு  யாராவது  ஒருவர்  எங்கள் சார்பில் முறைப்பாடு கொடுக்க முடியுமா?

இதுதான் எனது குடும்ப படம்.
சத்தியமாக சொல்லுகிறன்…. அவர்கள் (மதிவதனி, துவாராகா ),  இருவரையும் எனது கையால் தான்  இலங்கை இராணுவத்தினரிடம் கையளித்தேன்.

கடந்த 6வருடமாக  அவர்களை பற்றிய எந்த தகவல்களும்  இல்லை.  அவர்கள் எங்களுடன் இல்லவே இல்லை.   இது சத்தியம்.

என்னை,  முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்கள் பட்டியலில் இணைக்கா விட்டாலும், ஆகக்குறைந்தது காணாமல் போனவர்களின் பட்டியலிலாவது  இணைத்துக் கொள்ளுங்கள்.
எத்தனை தாய்மார்கள, சகோதரர்கள், சகோதரிகள், மனைவிமார்கள்  காணாமல் போன  தங்களுடைய உறவினர்களின் படங்களை வைத்துக் கொண்டு  கண்ணீர் வடிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன.

உங்களில்  யாராவது  என்னுடைய  படங்களை வைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறீர்களா?

வெளிநாட்டிலிருக்கும்  எனது அக்கா, அண்ணா கூட  இந்த  நினைவு நாளில் எங்களுக்காக ஒரு கண்ணீர் அஞ்சலி  கூட்டத்தைக் கூட  செய்யவில்லையே ஏன?

புலம்பெயர் தமிழர் அமைப்புகள்  நான் உயிருடன் இருக்கிறேன எனச் சொல்லி பிழைப்பு நடத்தப் பார்க்கிறார்கள்.
எனது அக்கா, அண்ணா  நீங்களுமா  நான் உயிருடன் இருக்கிறேன்  என போலியாக காட்டிக் கொள்கிறீர்கள்?.
கடைசியாக பூலோகத்தில் உள்ள மனிதகுலத்துக்கு ஒன்று  சொல்லுகிறேன்…
தமிழர்களுக்காக யாரும் போராட வேண்டாம்.அவர்கள் நன்றி கெட்ட ஜென்மங்கள். போலித்தனமானவர்கள், உண்மையை பேச மறுப்பவர்கள், முழு சுயநலவாதிகள்.போலியிசம் எந்தவொரு காலத்திலும் வெல்லப் போவதில்லை.

அதற்காக உங்கள்   சக்தியை வீணடிக்காதீர்கள்.   நான்  தமிழனுக்காக   போராடியதற்கு   பதிலாக,   வேறு ஒரு இனத்தவரின்   நலன்களுக்காக  போராடியிருக்கலாம்  என  எண்ணி வருந்துகிறேன்.

என்னைத் தேசியத் தலைவராக நேசிப்பவர்களில் யாராவது ஒருவர் எனது ஆத்மா சாந்தியடைய பிரார்தனை  செய்வீர்களானால்..   எனக்காக  சொர்க்க வாசல் திறக்கும் என இங்குள்ளவர்கள் சொல்லுகிறார்கள்.

செய்வீாகளா?…
நான் உங்களுக்கு எதாவது  துன்பம் விழைவித்திருந்தால்,  என்னை  மன்னித்து, நான் புதிய உயிர் பெற்று,   புதுவாழ்வு பெற்று  சுதந்திரமான  நாடொன்றில் வாழவேண்டும்  ஆசைப்படுகிறேன்.எனக்காக  பிரார்த்தனை செய்வீர்களாக..
நான் மீண்டும்  வருவேன் என்ற போலிக் கதைகளை நம்ப வேண்டாம்.
நன்றி.
வே.பிரபாகரன்

Share.
Leave A Reply

Exit mobile version