புங்குடுதீவு மாணவி  வித்யாவின்  மரணத்தை வைத்து தங்களுடைய   அரசியலை பிழைப்பை  நடத்திக்கொண்டிருக்கிறார்கள சில   தமிழ் அரசியல்வாதிகள்.

யாழ்.குடாநாட்டில் உள்ள 200 இளைஞர்களை ஏவிவிட்டு கடையடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

 

கடைகளை மூடாதவர்களின் கடைகளை உடைத்தும், புலிகளின் பாணியில்  வெருட்டியும், ரவுடித்தனம் பண்ணியும் கடைகளை  பூட்ட வைத்துள்ளார்கள்.

படுகொலை செய்யப்பட்ட  மாணவி வித்தியாவுக்காக மாணவ, மாணவிகள் அமைதியாக  போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் போது, மாறாக…..

புங்குடுதீவு மாணவியின்  படுகொலையை எதிர்த்து  போராட்டம்   நடத்துகிறோம் என்றபோர்வையில் யாழில்  தமிழ்  அரசியல்வாதிகள்  சிலர் (சிறிதரன், ஐங்கரநேசன்…)  தங்களின்  கைகூலிகளை ஏவி, வன்முறையாக பல்வேறு  அசம்பாவிதங்களை ஏற்படுத்தி யாழ்குடாநாட்டில் அமைதியின்மையை  தோற்றுவித்து,   மூலையில் முடங்கிக்கிடந்த இராணுவத்தை மீண்டு வீதியில் கொண்டுவந்துள்ளார்கள்.

மக்களை  பொலிசாருக்கு  எதிராக தூண்டிவிடுவதன் மூலம்,  பொலிசாருக்கும் பொது மக்களுக்குமிடையே ஒரு கலவரத்தை ஏற்படுத்தி,  மைதிரி அரசுக்கு எதிராக  மக்களை  தூண்டுவதே இவர்களின்  உள்நோக்கமாகும்.

11118281_396295177245306_495510544_n
குற்றவாளிகளை போலிசார்   கைது செய்துள்ளார்கள். அவர்களில் யார், யார் குற்றவாளிகள் என்பதை  நீதிமன்றமே முடிவு செய்யவேண்டும்.

அவர்களுக்கு என்ன தண்டணை வழங்கவேண்டும் என்பதையும்  நீதிமன்றம் தான் தீாமானிக்கவேண்டும.

குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமாம், தாங்கள் தான் குற்றவாளிக்கு தண்டனை வழக்குவோம் என  பொதுமக்கள்  ஆர்ப்பாட்டம்   நடத்தினால்  பொலிசார் என்ன  செய்ய முடியும்? குற்றவாளிகளை  பொதுமக்களிடம்  ஒப்படைக்க முடியுமா?

குற்றவாளிகளுக்கு  வக்கீல்கள்  யாரும்  ஆஜாராகக்கூடாதாம்! இது என்னடா கொடுமையிது?

குற்றவாளிகள்   என்று  சந்தேகத்தின்  பெயரில்  பொலிசாரால்  கைது செய்யப்பட்டவர்கள்  எல்லோரும் குற்றவாளிகளா?

தமிழனுக்கு  இன்னுமே  பகுத்தறிவு  வளரவில்லை  என்பதைதான் இது  எடுத்துக் காட்டுகிறது.

நல்லகாலம்   இவங்களின்  கையில்   நாடுகிடைக்கவில்லை.

இவங்கட கையில் நாடுகிடைத்திருந்தால்  குற்றவாளிகளை   நடுரோட்டில் வைத்து  அடித்துக்கொண்டிருப்பார்கள்.

இன்றைய நியைில்,  எது நடந்தாலும்…,  மை்திரியின்  அரசில்  பொலிசாரும், இராணுவத்தினரும்  அமைதியை  கடைப்பிடிக்கிறார்கள். அந்த  நிலைமை எவ்வளவு தூரம் தொடரும்??

யாழ் நகரில் அதிரடிப்படை குவிப்பு

Share.
Leave A Reply

Exit mobile version