சமூக வலைதளமான யூ-டியூபில் பல்வேறு காரணங்களுக்காக பல வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வரும் நிலையில்,  ‘மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள்’ என்பதை வலியுறுத்தி தனியார் குளிர்பான நிறுவனம் ஒன்று கடந்த 11-ம் தேதி வெளியிட்ட வீடியோ, இதுவரை பார்த்த 51 லட்சம் பேரையும் புன்னகையால் நிரம்பிய தங்கள் குழந்தைப் பருவத்துக்கே அழைத்துச் சென்றுள்ளது.

வயது வந்தவர்களை விட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 மடங்கு அதிகம் சிரிக்கிறார்கள். நடக்க, பேச கற்றுக் கொள்வதற்கு முன்பாக நாம் கற்றுக் கொண்டது சிரிப்பதுதான்.

அதை இன்று மறந்து விட்டோமோ? என்று கேள்வி கேட்கும் இந்த வீடியோவில் வரும் குழந்தைகளின் பரிசுத்தமான சிரிப்பு நம்மையும் குழந்தைகளாக்குகிறது. 

Share.
Leave A Reply

Exit mobile version