புங்குடுதீவு பள்ளி மாணவி கூட்டு வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டு கொழும்பு வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமாரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் பலத்த பாதுகாப்புடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
விசாரணை செய்த நீதிபதி குறித்த சந்தேக நபரை எதிர்வரும் யூன் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
விசாரணையின் பின்னரும் சுவிஸ் குமார் பூரண பொலிஸ் பாதுகாப்புடன் ஊர்காவற்துறையில் இருந்து யாழ் சிறச்சாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் ஐவரை மாத்திரம் கைது செய்ததுடன் சுவிஸ் குமார் சந்தேக நபர் இல்லை என்றும் பாதுகாப்பு நிமிர்த்தம் கொண்டு செல்வதாகவும் கூறி அறுவராக அழைத்துச் சென்றனர்.
எனினும் மற்றைய ஐவரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக இருந்தனர். இதனால் சுவிஸ் குமார் அன்று இரவே வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
இருப்பினும் விடயத்தை அறிந்த மக்கள் மறுநாள் 18ஆம் திகதி அவரது வீட்டினைத் தாக்கியதுடன் கைது செய்ய வேண்டும் என்றும் போராடினர்.
இதனையடுத்து அங்கு சீ.ஐ.டியினருடன் வந்திருந்த சட்ட விரிவுரையாளரான தமிழ்மாறன் சுவிஸ் குமாரை தான் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாக அங்கிருந்து தனது வாகனத்தில் அழைத்து வந்திருந்தார்.
அழைத்து வரப்பட்ட சுவிஸ் குமார் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். எனினும் அந்த தருணத்திலும் சந்தேகநபராக அவர் கைதாகவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாத்திரமே குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் வைத்திருக்கின்றோம் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் மறுநாள் 19 ஆம் திகதி வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று புங்குடுதீவு சர்வோதயா மண்டபத்தில் இடம்பெற்றது.
அந்தநேரத்தில் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த சட்ட விரிவுரையாளர் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாக கூறி அழைத்துச் சென்ற நபர் கொழும்பு வெள்ளவத்தையில் நடமாடுவதாக மக்கள் அறிந்து கொண்டனர்.
இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து குறித்த சந்தேக நபர் மீது முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டதனையடுத்து வெள்ளவத்தை பொலிஸாரினால் சுவிஸ் குமார் கைது செய்யப்பட்டார்.
எனினும் குறித்த சந்தேகநபரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரும் வரை சட்ட விரிவுரையாளரை செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வீதி மறியல்களிலும் ஈடுபட்டனர்.
சுமார் 5மணித்தியாலங்கள் நீடிப்பின் பின்னர் நிலைமை முப்படையினருடைய உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
யாழ். நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சந்தேக நபர் சுவிஸ் குமார் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு ஆஜர்ப்படுத்தப்படுவார் என வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார். அதன்படி அவர் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டும் ஆஜர்ப்படுத்த முடியவில்லை.
நேற்று பூரண ஹர்த்தால், வன்முறை சம்பவங்களால் பாதுகாப்பு இல்லாமையால் ஆஜர்ப்படுத்தப்படவில்லை. எனினும் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .
யாழ். நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சந்தேக நபர் சுவிஸ் குமார் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு ஆஜர்ப்படுத்தப்படுவார் என வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார். அதன்படி அவர் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டும் ஆஜர்ப்படுத்த முடியவில்லை.
நேற்று பூரண ஹர்த்தால் , வன்முறை சம்பவங்களால் பாதுகாப்பு இல்லாமையால் ஆஜர்ப்படுத்தப்படவில்லை. எனினும் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .
மாணவி வித்தியா படுகொலை:சுவிஸ சந்தேக நபர் யாழ்பாணம் கொண்டு செல்லப்பட்டார்!!