சமீபத்தில் தமிழில் கமல்ஹாசன், த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிக்கும் தூங்காவனம் படத்தின் முதல் பார்வை வெளிவந்தது. மேலும் இந்த படம் தெலுங்கில் சீகட்டி ராஜ்ஜியம் என்ற பெயரில் வெளிவரவிருக்கிறது.
இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் தான் நடந்தது. இந்த பிரஸ் மீட்டின் போது நடிகை த்ரிஷா அற்புதமான வெந்தய நிற போகோ & ஜாக்கி அணிந்து சிக்கென்று க்யூட்டாக வந்திருந்தார்.
என்ன தான் தனது திருமணம் நின்று விட்டாலும், சற்றும் முகம் வாடாமல் இன்னும் பொலிவான தோற்றத்தில் காணப்படுகிறார்.
சரி, இப்போது சீகட்டி ராஜ்ஜியம் படத்தின் பிரஸ் மீட்டிற்கு நடிகை த்ரிஷா மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!
போகோ & ஜாக்கியில் த்ரிஷா
இது தான் நடிகை த்ரிஷா அணிந்து வந்த வெந்தய நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட காலர் கொண்ட ஃபுல் ஸ்லீவ் சர்ட் மற்றும் பேண்ட்.
மேக்கப்
த்ரிஷா கண்களுக்கு காஜல் மற்றும் ஐ லைனர் போட்டு, உதட்டிற்கு மின்னும் நியூட் லிப்ஸ்டிக் போட்டு உடைக்கு பொருத்தமான மேக்கப்பில் வந்திருந்தார்.
ஹேர் ஸ்டைல்
த்ரிஷா இந்த சர்ட் மற்றும் பேண்ட்டிற்கு சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.
நியூட் ஷூ
இந்த வெந்தய நிற உடைக்கு த்ரிஷா கருப்பு நிற ஷூ போட்டு வந்திருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும். ஆனால் இவர் நியூட் நிற ஷூ போட்டு வந்திருந்தார். இருப்பினும் இதுவும் உடைக்கு பொருத்தமாகத் தான் இருந்தது.
யட்சன் – டீசர்