அமைச்சர் ஒருவரின் ஷூவை, பாதுகாவலர் கட்டிவிட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநில திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ரச்பால் சிங். இவர் நேற்று சட்டசபையில் நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார்.

அஞ்சலி கூட்டம் என்பதால் தனது ஷுவை வெளியே கழற்றி விட்டு சென்றிருந்தார். கூட்டம் முடிவடைந்ததும் வெளியே வந்த அமைச்சர் ரச்பால் சிங், தனது ஷூவை எடுத்து அணிந்திருக்கிறார். அப்போது, அங்கிருந்த பாதுகாவலர், ஷுவின் லேசை கட்டி இருக்கிறார்.

இது அங்குள்ள கேமிராவில் பதிவாகி, பத்திரிகைகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது, அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version