கள்ளக்காதல் அது என்றும் ஆபத்தானது. அது கடந்த மே 23ஆம் திகதி சனிக்­கி­ழமை. நேரம் எப்­ப­டியும் இரவு 9.00 மணியை தாண்­டி­யி­ருக்கும். 119 இரவு நேர மோட்டார் சைக்கிள் ரோந்தில் கான்ஸ்­ட­பிள்­க­ளான பிரி­யந்த (3912) ரத்­நா­யக்க (69471) ஆகியோர் ஈடு­பட்­டி­ருந்த நேரம் அது.

அத்­து­ரு­கி­ரிய பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கஹந்­தொட்ட பிர­தே­சத்தில் பிரி­யந்­தவும் ரத்­நா­யக்­கவும் ஈடு­பட்­டி­ருந்த போது சந்­தே­கத்­திற்­கி­ட­மான வெள்ளை வேன் ஒன்­றினை அவர்கள் அவ­தா­னித்­துள்­ளனர்.

JN9802 என்ற மெஸ்டா ரக குறித்த வேன் பாழ­டைந்த இடங்­களில் அல்­லது சன நட­மாட்­ட­மற்ற பிரதேசங்­களில் வேகத்தை குறைப்­பதும் பின்னர் வேக­மாக பய­ணிப்­ப­து­மாக இருந்­துள்­ளது.

இந்­நி­லையில் அந்த வெள்ளை வேனின் பயணம் குறித்து சந்­தேகம் கொண்ட பிரி­யந்­தவும் ரத்நாயக்கவும் அந்த வேனை பின் தொடர்ந்­துள்­ளனர்.

ஒரு இடத்தில் வைத்து வேனை நிறுத்­து­மாறு அவர்கள் சமிக்ஞை செய்­யவே அந்த வேன் சிறிது தூரம் அப்பால் சென்று நிறுத்­தப்­பட்­டது.

இந்­நி­லையில் அந்த வெள்ளை வேனை பின்­தொ­டர்ந்த பிரி­யந்­தவும் ரத்­நா­யக்­கவும் உட­ன­டி­யாக செயற்­பட்டு அந்த வேன் நிறுத்­தப்­பட்ட இடத்­துக்கு சென்­றனர்.

தாம் களி­யாட்டம் ஒன்­றுக்­காக விரை­வாக செல்­வ­தா­கவும் தம்மை செல்ல அனு­ம­திக்­கு­மாறும் அவர்கள் பொலி­ஸாரைக் கோரிய நிலையில் பொலிஸார் அவர்­களின் கோரிக்­கைக்கு இணங்கவில்லை.

Burned-body-athurugiriya1வேனை சோதனை செய்ய வேண்டும் எனக்­கூ­றிய பொலிஸ் கான்ஸ்­டபிள் பிரி­யந்த வேனின் பின்கதவினை திறந்­த­போது கரு­கிய வாடை வெளியே வீச ஆரம்­பித்­துள்­ளது.

தொடர்ந்து வேனின் பின் பகு­தியை சோதனை செய்­த­போது அங்கு கருகிய நிலையில் ஒரு சடலம் உரப்­பை­களால் கட்­டப்­பட்ட நிலையில் இருந்­துள்­ளது.

உட­ன­டி­யாக செயற்­பட்ட கான்ஸ்­டபிள் பிரி­யந்த அந்த வேனின் சார­தி­யாக பய­ணித்த நப­ரையும் முன் ஆச­னத்தில் இருந்­த­வ­ரையும் கைது செய்­த­துடன் விட­யத்தை தமது மேல­தி­கா­ரி­யான அத்­து­ரு­கி­ரிய பொலிஸ் நிலைய பதில் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சஞ்­சீவ மக­நா­ம­விற்கும் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி உப பொலிஸ் பரி­சோ­தகர் அசங்க பிரே­ம­லா­லுக்கும் அறி­விக்­கவே அவர்கள் விசேட பொலிஸ் குழு­வுடன் ஸ்தலத்துக்கு விரைந்­தனர்.

விடயம் பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளுக்கும் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டு, இந்த உட­னடி விசா­ரணை ஆரம்பிக்கப்­பட்­டது.

இந்­நி­லையில் அந்த வெள்ளை வேனை பொலிஸ் பொறுப்பில் எடுத்த அத்­து­ரு­கி­ரிய பொலிஸார் அந்த வேனில்­இ­ருந்த காலி வட்­ட­ரெக – தெனி­ய­வத்த பிர­தே­சத்தை சேர்ந்த 48 வய­து­டைய அநுர திலிப் நாணயக்­கார மற்றும் அத்­து­ரு­கி­ரிய பொர­லு­கொட பிர­தே­சத்தைச் சேர்ந்த 53 வய­து­டைய பீட்டர் ஜோசப் சரத் ஆகி­யோரை கைது செய்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

ஸ்தலத்­துக்கு கடு­வலை மேல­திக நீதிவான் வந்து பார்­வை­யிட்­டதை தொடர்ந்து எரிந்த நிலையில் இருந்த சட­ல­மா­னது கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் பொலிஸ் பிரேத அறைக்கு மேல­திக பரிசோ­த­னை­க­ளுக்­காக அனுப்­பட்­டது.

அப்­போது அந்த சடலம் அடை­யாளம் காண முடி­யாத அளவு சிதைந்­­தி­ருந்­தது.

இந்த கைது தொடர்பில் மிகத் திற­மை­யாக செயற்­பட்ட கான்ஸ்­டபிள் பிரி­யந்த எம்­மிடம் இப்­படி கருத்துக்­களைப் பகிர்ந்து கொண்­டனர்.

நாங்கள் சனிக்­கி­ழமை இரவு ரோந்துப் பணியில் ஈடு­பட்­டி­ருந்தோம். இதன்­போது கஹந்­தொட்ட பிரதேசத்தில் சந்­தே­கத்­துக்கு இட­மான வெள்ளை வேன் ஒன்று எமது கண்ணில் பட்­டது.

அந்த வேன் சிற்­சில இடங்­களில் நிறுத்தி நிறுத்தி பய­ணித்­தது. எமது மோட்டார் சைக்­கிளைக் கண்டு வேகத்தை அதி­க­ரித்­தது.

நானும் சிவில் பாது­காப்பு படை வீர­ரான ரத்­நா­யக்­கவும் வேனைத் துரத்திச் சென்று நிறுத்­தினோம். அந்த வேனில் இருவர் இருந்­தனர்.

அவர்கள் இரு­வரும் சேர்…. எங்­க­ளுக்கு பார்ட்டி ஒன்று உள்­ளது. அத­னால்தான் கொஞ்சம் வேக­மாக செல்­கின்றோம் என்­றனர்.

எனினும் அவர்­க­ளது பதிலை எதிர்­பார்க்­காத நாம் வேனை சோதனை செய்தோம். இதன்­போ­துதான் கருகிய ஒரு சட­லத்தை நான் கண்டேன்.

அதனை கண்ட நாம் ஆச்­ச­ரி­ய­ம­டைந்தோம். அவர்கள் ஒவ்­வொரு கதை­யாக எம்­மிடம் தெரி­வித்­தனர்.

எரித்த சட­லத்தை பாழ­டைந்த இட­மொன்றில் போடவே தாம் வந்­த­தாக அப்­போது அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு கட்­டத்தில் சேர்… எங்­களை போக விடுங்கள்.. நீங்கள் கோரும் பணத்­தொ­கையை நாம் தருகின்றோம் எனவும் பேரம் பேசினர்.

எனினும் நாம் மசி­ய­வில்லை. எமது உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்து அவர்கள் இரு­வ­ரையும் கைது செய்தோம் என்றார்.

இந்­நி­லையில் தான் கைது செய்­யப்­பட்ட அநுர திலீப்­பையும் பீட்டர் ஜோசப்­பையும் நீதி­மன்றில் பெற்றுக்­கொள்­ளப்­பட்ட 48 மணி­நேர தடுப்பு காவல் உத்­த­ரவின் கீழ் அத்­து­ரு­கி­ரிய பொலிஸ் நிலையத்தின் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி உப­பொலிஸ் பரி­சோ­தகர் பிரே­மலால் தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

இந்த விசா­ர­ணை­களில் வேனில் இருந்த சடலம் தொடர்­பிலும் அது தொடர்­பி­லான விப­ரங்­க­ளையும் பொலிஸார் வெளிப்­ப­டுத்திக் கொண்­டனர்.

அதன்­படி கரு­கிய நிலையில் சட­ல­மாக கிடந்­தவர் ஜகத் பிரசாத் என்ற காலி வட்­ட­ரெக கிழக்கு பிர­தே­சத்தை சேர்ந்த 30 வய­து­டைய இரா­ணு­வத்தின் விசேட படை­ய­ணியின் முன்னாள் வீரர் என்­பது தெரி­ய­வந்­தது.

பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவான் குண­சே­கரவின் தக­வல்­களின் படி ஜகத் பிரசாத் கொலை செய்­யப்­பட்டு எரிக்­கப்­பட்ட நிலை­யி­லேயே சட­லத்தை அடை­யாளம் காண முடி­யா­த­வாறு சிதைத்து பாழடைந்த இட­மொன்றில் கைவிட்டு செல்ல சந்­தேக நபர்கள் முயற்சித்துள்ளனர்.

அத்­துடன் ஜகத் பிர­சாத்­துக்கு எதி­ராக பாலியல் பலாத்­காரம், வீடு­க­ளுக்கு தீ வைத்தல், திருட்டு உள்ளிட்ட பல குற்றச் சாட்­டுக்கள் இருப்­ப­தாக சுட்­டிக்­காட்டும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர போத்­தல பொலிஸ் நிலை­யத்தில் அவ­ருக்கு எதி­ராக இரு பாலியல் பலாத்­கார முறைப்பாடு­களும் மூன்று கொள்­ளைகள் தொடர்­பிலும் மேலும் இரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் முறைப்பாடுகள் உள்ள நிலையில் நீதி­மன்­றங்­களில் வழக்­கு­களும் உள்­ள­தாக குறிப்­பிட்டார்.

சடலம் தொடர்­பான தக­வல்­க­ளுக்கு மேல­தி­க­மாக அத்­து­ரு­கி­ரிய பொலிஸார் மேற்­கொண்ட தொடர் விசா­ர­ணை­களில் அது­வொரு கொலை என்­ப­தையும் அத­னுடன் மேலும் இரு சந்­தேக நபர்­க­ளுக்கு தொடர்­பி­ருப்­ப­தையும் அத்­து­ரு­கி­ரிய பொலிஸார் வெளிப்­ப­டுத்திக் கொண்­டனர்.

பிலி­யந்­தலை பொல்­வோன மட­பாத்த பிர­தே­சத்தை சேர்ந்த 39 வய­து­டைய ஜீவந்த சுரங்க, அதே பிரதேசத்தின் ஜம்­பு­ரெ­லிய வீதியை சேர்ந்த 34 வய­து­டைய வித்­திக சங்க விஜே­சூ­ரிய ஆகிய சந்­தேக நபர்­க­ளுக்கே இக்கொலையுடன் தொடர்­புள்­ளமை தெரி­ய­வ­ரவே அது தொடர்பில் பிலி­யந்­தலை பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்­டது.

உடன் செயற்­பட்ட பிலி­யந்­தல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சோம­ரத்ன விஜே­ய­முனி குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி உப பொலிஸ் பரி­சோ­தகர் நந்­த­சிறி கமகே ஆகி­யோரின் கீழான பொலிஸ் குழுவினர் அவர்­களை கைது செய்து பின்னர் அத்­து­ரு­கி­ரிய பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர்.

அவர்­க­ளுக்கு எதி­ரா­கவும் பின்னர் 48 மணி நேர தடுப்­புக்­காவல் உத்­த­ரவை பெற்­றுக்­கொண்ட பொலிஸார் விசா­ர­ணை­களை தொடர்ந்­தனர். சந்­தேக நபர்கள் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தின் பிர­காரம் நடந்­தது இதுதான்.

கைதாகி தற்­போது விளக்­க­ம­றி­யலில் உள்ள பிர­தான சந்­தேக நப­ரான அநுர திலீப்பின் மனைவி சஹானா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது)வுக்கும் கொலை செய்­யப்­பட்­டுள்ள ஜகத்­துக்கும் இடையே ஒரு காலத்தில் ர­க­சிய தொடர்பு இருந்­துள்­ளது.

அந்த காலப்­ப­கு­தியால் அநுர திலீப் வெளி­நாட்டில் வேலை செய்­துள்ளார். அப்­போது இரு தரப்­பி­னரும் காலி வட்­ட­ரெக பிர­தே­சத்­தி­லேயே இருந்த நிலையில் இந்த ர­க­சிய தொடர்பு குறித்து அநுர திலீப்­புக்கும் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லை­யில்தான் கடந்த செப்டம்பர் மாதம் காலி போத்­தல பொலிஸ் பிர­தே­சத்­துக்கு உட்­பட்ட அநுர திலீப்பின் வீடு ஜகத்தினால் தீ வைத்து அழிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து சஹானா தனது தாய்­வீ­டான பிலி­யந்­த­லையிலுள்ள மட­பாத்த வீட்­டுக்கு வந்து அங்கு தனது குடும்­பத்­தா­ருடன் தனி­யாக வசித்­துள்ளார்.

இந்­நி­லையில் கடந்த சனிக்­கி­ழமை பிலி­யந்­தல, மட­பாத்­த­வி­லுள்ள சஹா­னாவின் தாய் வீட்­டுக்கு ஜகத் சஹா­னாவை தேடி வந்­துள்ளார்.

இந்­நி­லையில் சஹா­னாவின் இளைய சகோ­த­ர­ரான ஜீவந்த சுரங்க, ஜகத் சஹா­னாவை தேடி வந்த தகவலை அநுர திலீப்­புக்கு தொலை­பே­சியில் தெரி­வித்­துள்ளார்.

ஏற்­க­னவே பல சம்­ப­வங்கள் தொடர்பில் ஜகத் தொடர்பில் வைராக்­கி­யத்­துடன் இருந்த அநுர திலீப் அத்துரு­கி­ரி­யவை சேர்ந்த பீட்டர் ஜோசப் என்ற தனது மைத்­து­ன­ரையும் உத­விக்­க­ழைத்துக் கொண்டு அந்த வெள்ளை வேனில் பிலி­யந்­த­லையிலுள்ள சஹா­னாவின் தாய் வீட்­டுக்கு சென்­றுள்­ளனர்.

இதன் போது அங்­கி­ருந்த ஜகத்தை கண்­டதும் அநுர திலீப், பீட்டர் ஜோசப், விந்­திக சங்க விஜே­சூ­ரிய, ஜீவந்த சுரங்க ஆகி­யோர் இணைந்து ஜகத்தை பிடித்து கட்டி பொல்­லு­களால் பல­மாக தாக்­குதல் நடத்தியுள்­ளனர்.

இதனை தொடர்ந்து வீட்­டா­ரிடம் அவரை பொலிஸில் ஒப்­ப­டைக்கப் போவ­தாக கூறி அந்த வெள்ளை வேனில் கொண்டு சென்­றுள்­ளனர்.

எனினும் அவர்கள் ஜகத்தை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­க­வில்லை. மாறாக அவரை பீட்டர் ஜோஸப்பின் அத்­து­ரு­கி­ரிய பொர­கொட வீட்­டுக்கு பின்னால் உள்ள இறப்பர் தோட்­டத்­திற்கு அழைத்து சென்­றுள்ள சந்­தேக நபர்கள் அங்கு வைத்து ஜகத் மீது பெற்­றோலை ஊற்றி அவர் மீது டயர்­க­ளையும் போட்டு தீ வைத்து எரித்­துள்­ளனர்.

முகம், கால், கைகள் என அனைத்தும் அடை­யாளம் தெரி­யா­த­வாறு சிதைந்து கரு­கிய பின்னர் அந்த சடலத்தை உரப்­பை­களின் உத­வி­யுடன் வேனில் ஏற்றி பாழ­டைந்த இட­மொன்றில் கைவிட்டு செல்லும் நோக்­கோடு பய­ணித்­துள்­ளனர்.

சந்­தேக நபர்கள் அந்த சட­லத்தை கள­னி­கங்கை அல்­லது அதனை சார்ந்த பாழ­டைந்த இட­மொன்றில் போடு­வ­தையே நோக்­காக கொண்­டி­ருந்­துள்­ளனர். இந்­நி­லை­யி­லேயே பொலி­ஸா­ரிடம் அவர்கள் வச­மாக சிக்கி கொண்­டுள்­ளனர்.

விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வரின் தக­வல்­களின் படி இரா­ணு­வத்­தி­லி­ருந்து தப்பி வந்த ஜகத் பல்­வேறு குற்­றங்­களில் ஈடு­பட்­டு­வந்த நிலையில் முதலில் சஹா­னாவை பல­வந்­த­மாக அச்­சு­றுத்தி தனது பாலியல் தேவையை பூர்த்தி செய்துள்ளான்.

பின்னர் சிலகாலம் இருவரும் விருப்பத்துடன் இருந்தாலும் இறுதியில் சஹானா ஜகத்துடன் தொடர்பை துண்டித்துள்ள நிலையில் குடும்பப்பிரச்சினை காரணமாக அநுர திலீப்புடனும் சேர்ந்து வாழாது, தனது தாய் வீட்டில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவேறு சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட 48 மணிநேர தடுப்புக்காவல் அனுமதியின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் விசாரணைகளின் பின்னர் கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட ஜகத் தரப்புக்கும் சந்தேக நபர்கள் தரப்புக்கும் நீண்டகாலமாக நிலவிய பகைமை, குரோதம், வைராக்கியம் மற்றும் ஜகத்தின் சஹானாவுடனான கள்ளக்காதலும் கொலைக்கு காரணமானதாக பொலிஸாரின் விசாரணைகளில் கண்டு பிடிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

கள்ளக்காதல் அது என்றும் ஆபத்தானது.

Share.
Leave A Reply

Exit mobile version