கென்யாவை சேர்ந்த வழக்கறிஞர் கிப்ரோனோ என்பவர், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மகளை 7 ஆண்டுகளாக காதலிப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தி நைரோபி’ பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 2008ம் ஆண்டு முதன் முதலாக ஒபாமாவின் மகள் மலியாவை(16) பார்தேன், அன்று முதல் அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்.
அத்துடன் கென்யா வரும்போது மலியாவை அழைத்துவருமாறு ஒபாமாவிடம் வலியுறுத்த உள்ளேன்.
அப்படி நான் மலியாவை சந்தித்தால், பாரம்பரிய முறைப்படி எனது காதலை அவரிடம் வெளிப்படுத்துவேன்.
அத்துடன் அதிபர் ஒபாமாவுக்கு 50 மாடுகள், மற்றும் 70 ஆடுகளை தருகிறேன் என்று கூறியுள்ளார்.