ரோஹிங்யா இனம் அழிக்கப்படுகிறதா மியன்மாரில். குழந்தை பாலுக்கு அழலாம், பால் கொடுக்க தாய் அழலாமா? அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள் ரோஹிங்யாக்கள்… என்னசெய்வதென்று தெரியவில்லை அவர்களுக்கு. படகில் ஏறினார்கள்… துடுப்பை போட்டார்கள் ஆனால் எங்கு போவது… தெரியாது!

ஒரு இனம்… நடுக்­க­டலில் நாதி­யற்று தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. யாரும் அவர்­களை கவ­னிப்­ப­தாக இல்லை…

அவர்களை ரோஹிங்யாக்கள் என்கிறார்கள்.

ஆம்… மியன்­மாரில் ஒரு இனத்­துக்கு எதி­ரான கல­வரம் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில், அந்தக் கூட்டம் பட­குகள் ஏறி புறப்­பட்­டது…

ஆனால் எங்கு போவ­தென்று அவர்­க­ளுக்கு தெரி­யாது. எங்­கே­யா­வது போவோம் தப்­பித்தால் போதும் என்­றுதான் பட­கு­களில் ஏறி­யி­ருப்­பார்கள். இன்­று­வரை கடல் நடுவில் பட­­கி­லேயே தங்கியிருக்கிறார்கள்.

ஒருவர் அல்ல இருவர் அல்ல கிட்­டத்­தட்ட ஏழா­யி­ரத்­திற்கும் அதி­க­மா­ன­வர்கள் நடுக்­க­டலில் தஞ்சமடைந்­தி­ருக்­கி­றார்கள்.

ரோஹிங்­கியா என்ற இனத்­த­வர்­களாம் இவர்கள்.

ஏன் இப்­படி என்ற கேள்­விக்கு… யார் இவர்கள் என்­பதைத் தெரிந்­து­கொண்­டால்தான் இந்தப் பிரச்சினையின் ஆணி­வேர்­வரை பர­வி­யி­ருக்கும் வீரி­யத்தைத் தெரிந்­து­கொள்­ள­மு­டியும்.

En-Birmanie-les-Rohingyas-fuient-par-la-mer_article_popin
மியன்மார் என அறி­யப்­படும் பர்மாதான் இவர்­களின் சொந்த நாடு
. இல்லை இல்லை இது அவர்­களின் சொந்த நாடு இல்லை என்­ப­தி­லி­ருந்­துதான் பிரச்­சினை ஆரம்­பிக்­கி­றது.

மிக அண்­மையில் தான் மக்­க­ளாட்சி முறைக்குத் திரும்­பி­யது மியன்மார். சுமார் 50 ஆண்­டு­க­ளுக்கும் அதி­க­மாக இரா­ணுவ ஆட்­சியில் சிக்கித் தவித்த மியன்மார் கொஞ்சம் கொஞ்­ச­மாக மக்­க­ளாட்­சிக்கு திரும்பி வந்­தது.

சந்திரிகாவுடன் ..ஆங் சாங் சூகி

இதற்­காகப் பெரிதும் போரா­டி­யவர் ஆங் சாங் சூகி என்­பது உல­க­றிந்­தது. இவர் பல ஆண்­டு­களாக வீட்டுக்­கா­வலில் வைக்­கப்­பட்டு அண்­மை­யில்தான் விடு­த­லை­யானார்.

உலக நாடு­களில் எழுந்­துள்ள சர்­வா­தி­கார ஆட்­சி­க­ளுக்கு எதி­ரான ஒரு சூழலும், அழுத்­தமும் கூட இதற்கு ஒரு கார­ண­மாகும்.

இந்த நிலையில் உல­கமே கூர்­மை­யாக மியன்­மாரை அவ­தா­னித்து வந்த நிலையில் ஏற்­பட்ட சோகமே ரோஹிங்யா கல­வரம்.

ரோஹிங்யா எனப்­ப­டு­பவர்கள் இஸ்­லா­மிய வங்­காளி மொழி பேசும் மக்கள். இவர்கள் சுமார் 800,000 பேர் வரை மியன்­மாரின் மேற்கு மாநி­ல­மான அரக்கான் மாநி­லத்தில் வாழ்ந்து வரு­கின்றார்கள்.

ரோஹிங்­யாக்கள் ஏனைய நாட்டில் வாழும் பிற முஸ்­லிம்­க­ளிடம் இருந்து தனித்­து­வ­மா­ன­வர்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கி­றார்கள்.

பல நிலை­களில் ரோஹிங்­யாக்கள் காலம் கால­மாக வாழ்ந்து வரு­வ­தாகக் கூறப்­பட்­டா­லும்­கூட, 1950களுக்கு முன்னர் ரோஹிங்­யாக்கள் மிகவும் சிறிய இன­மா­கவே இருந்­துள்­ளனர்.

பெரும்­பா­லா­ன­வர்கள் பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து கூலி­க­ளாக மியன்­மாரில் வேலைக்கு சென்­ற­வர்கள்.

மியன்­மாரின் இதரப் பகு­தி­களில் இந்­திய முஸ்­லிம்கள், மலாய் முஸ்­லிம்கள், சீன முஸ்­லிம்கள் ரங்கூன் போன்ற நக­ரத்தில் வியா­பா­ரத்தில் ஈடு­பட்டு வந்­தார்கள்.

ரங்கூன், மண்­டலாய் போன்ற பகு­தி­களில் சில பர்­மிய முஸ்­லிம்கள் சில நூறு ஆண்­டு­க­ளாக இங்கு வாழ்ந்து வந்­தனர். இவர்­களும் ரோஹிங்­யாக்­களும் ஒன்று என்றும் பலர் நினைக்­கி­றார்கள்.

ரோஹிங்­யாக்கள் வியா­பாரம் போன்ற தொழில்­களில் ஈடு­ப­டு­வ­தில்லை. பலர் நினைப்­பது போல முகா­லய மன்னர் காலத்தில் குடி­யே­றிய வியா­பா­ரி­களின் வழி வந்­த­வர்­களும் அல்ல இவர்கள்.

பங்­க­ளா­தேஷின் சித்­தங்காங் எல்லைப் பிர­தேச வழி­யாகக் கூலி வேலைக்குச் சென்­ற­வர்­களே ரோஹிங்­யாக்கள்.

1950களுக்குப் பின் பல ஆயிரம் பங்­க­ளாதேஷ் முஸ்­லிம்கள் திருட்­டுத்­த­ன­மாக மியன்­மாரில் குடி­யேறத் தொடங்­கி­னார்கள்.

பங்­க­ளாதேஷ் விடு­தலைப் போர் காலங்­களில் மேலும் ஆயிரம் ஆயிரம் பங்­க­ளாதேஷ் முஸ்­லிம்கள் மியன்­மா­ருக்குள் நுழைந்து அங்­கேயே குடி­யேறி விட்­டனர்.

ரோஹிங்யா என்ற வார்த்தை பெரும்­பாலும் 1990களி­லி­ருந்­துதான் பத்­தி­ரி­கை­களில் வரத் தொடங்கியது.

ரோஹிங்­யாக்­களைப் பற்­றிய ஆய்வை கின் மாங்க சா என்­பவர் நடத்­தினார். இதில் பல அதிர்ச்சித் தகவல்­க­ளையும், ஆச்­சரி­ய­மான விட­யங்­க­ளையும் அவர் கண்­ட­றிந்தார்.

ரோஹிங்யா என்ற வார்த்தை மியன்­மாரின் அராக்கன் மொழி வார்த்­தையே அல்­லவாம். அராக்கன் மாநி­லத்தில் பேசப்­படும் எந்­த­வொரு மொழி­யிலும் ரோஹிங்யா என்ற வார்த்தை இடம்­பெற்­றதே இல்லையாம்.

அதனால் வங்­காள மொழியில் இந்தச் சொல்லை தேடிய போதும் அப்­படி ஒரு சொல் இடம்­பெ­றவே இல்­லையாம்.

ஆகவே அவர் பல இலக்­கி­யங்கள், ஆவ­ணங்­களில் தேடிய போதும் ஏமாற்­றமே மிஞ்­சி­யதாம். பிரித்தானிய ஆட்­சியின் போது மியன்மார் குறித்துப் பல நூல்­களை எழு­திய மோரிஸ் காலிஸ் ரோஹிங்யா என்ற சொல்லை எங்கும் குறிப்­பி­டவே இல்­லையாம்.

பர்­மாவில் 1921ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணிப்பின் போது அங்கு வாழ்ந்த இனங்கள் அனைத்தும் குறிப்­பி­டப்­பட்டு இருந்­தது. ஆனால் அவற்றில் கூட ரோஹிங்யா என்ற சொல் இடம்­பெறவே இல்லை.

ஏன் இத்­த­னைக்கும் பர்மா கெஸ்ட்­டி­லும்­கூட இவர்கள் பற்­றிய எந்தக் குறிப்பும் இல்லை.

இந்த நிலையில் அராக்­கனில் வாழ்ந்த வங்­காளி முஸ்­லிம்கள் போலி வர­லாற்றுத் தக­வல்­களை வெளி­யிடத் தொடங்­கி­னார்கள் என்றும் ஒரு தகவல் சொல்­கி­றது.

அந்த தக­வ­லின்­படி அரபு வணி­கர்கள் வந்த கப்பல் அராக்­கனில் மூழ்­கி­விட அங்­கி­ருந்து தப்பி வந்து அவர்கள் அராக்­கனில் குடி­யேறி பர்­மிய பெண்­களை மணந்­த­தா­கவும், அவர்­களே ரோஹிங்­யாக்கள் எனவும் சொல்ல ஆரம்­பித்­தார்­களாம்.

பல வர­லாற்று ஆய்­வா­ளர்கள் இந்தக் கூற்றை மறுத்தும் வந்­தனர்.

ஆனால் ம்ராக் யூ அர­சர்­களின் படையில் சில முஸ்லிம் போர்­வீ­ரர்கள் இருந்­தார்கள். அவர்கள் பர்­மிய பெண்­களை மணந்து வாழ்ந்­தார்கள். அவர்­களின் வாரி­சுகள் சிலர் இன்­ற­ளவும் அராக்கன் மாநி­லத்தில் வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

இவர்­களின் எண்­ணிக்கை சிலநூறுதான். இவர்­களின் தோற்­றமும், மொழியும் அராக்­கனில் வாழும் ரக்கீங்­களை ஒத்து இருக்கும். ஆனால் மியன்­மா­ருக்கு வெளியே இருப்­ப­வர்கள் இவர்­க­ளையும் ரோஹிங்­யாக்கள் என்று குழப்பிக் கொள்­ப­வர்கள் மிக அதிகம்.

இரண்டாம் உலக யுத்தம் உக்­கி­ர­ம­டைந்த காலங்­களில் ஜப்­பான் படைகள் பொழிந்த குண்டு மழை­க­ளுக்கு அஞ்­சிய பர்­மிய ராக்கீன் இன மக்கள் பங்­க­ளா­தே­ஷிற்கு அருகே உள்ள கிரா­மங்­களில் இருந்து வெளி­யேறி அராக்கன் மாநி­லத்தில் உள்ள நகரப் பகு­தி­க­ளுக்குச் சென்­று­விட்­டனர்.

பின்னர் ஆள் அர­வ­மற்ற பகு­தி­க­ளாக இக்­கி­ரா­மங்கள் மாறிப் போனது. இதனால் இப்­ப­கு­திகள் ருவாகாங்க் என்­ற­ழைக்­கப்­பட்­டன. ருவாகாங்க் என்றால் பழைய கிரா­மங்கள் அல்­லது ஆள் இல்­லாத கிரா­மங்கள் என்று அர்த்­தமாம்.

இந்த நிலையில் பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து குடி­யே­றிய கூலித் தொழி­லா­ளர்­களும், சட்ட விரோத குடியேறி­களும் இந்தக் கிரா­மங்­களில் குடி­யேறி வாழத் தொடங்­கி­னார்கள்.

இந்த நிலையில் அராக்கன் பகு­தி­களில் உள்ள நக­ரங்­க­ளுக்குக் கூலி வேலை செய்யப் போகும் வங்காளிகள் தாம் எங்­கி­ருந்து வரு­கின்­றனர் எனக் கேட்கும் கேள்­வி­க­ளுக்குத் தாம் ருவா­காங் காஜா எனச் சொல்­வார்­களாம்.

அதா­வது ருவா­காங்கில் இருந்து வரு­கின்றோம் என, அவர்­க­ளுக்குத் தெரி­யாது ருவாகாங்க் என்­றாலே பழைய கிரா­மங்கள் என்று அர்த்­த­மாகும். இதுவே காலப் போக்கில் ரோஹி­யாக்கள் என்ற சொல்­லாக மரு­வி­யது.

ரோஹி­ங்யாக்கள் சிலர் தாங்கள் முகா­ல­யர்­களின் வாரிசு என்­று­கூட அறி­வித்­துக்­கொண்­டார்கள். ஆனாலும் அதுவும் உண்மை இல்லை என்­பதைப் பர்­மிய வர­லாற்று ஆய்­வா­ளர்கள் கண்­ட­றிந்­துள்­ளனர்.

பர்­மாவில் குடி­யே­றிய இந்­திய வம்­சா­வளி முஸ்­லிம்கள் பலர் ரங்­கூனில் வாழ்­கின்­றார்கள். இவர்கள் சர­ள­மாகப் பர்­மிய மொழி பேசக் கூடி­ய­வர்கள்.

பர்­மிய அர­ச­வையில் போர் வீரர்­க­ளாக இருந்த சில முஸ்­லிம்கள் பர்­மி­யர்­க­ளோடு கலப்­புற்று பர்­மிய மொழி பேசி அராக்கன் உட்­படச் சில பகு­தி­களில் வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

ஆங்­கி­லேயர் ஆட்சிக் காலத்தில் நூறு ஆண்­டு­க­ளுக்கு முன் குடி­யே­றிய தமி­ழர்கள், தெலுங்­கர்கள், தமிழ் முஸ்­லிம்கள், மலாய் முஸ்­லிம்கள் போன்­றோரும் பர்­மிய மொழியே பேசி வரு­கின்­றார்கள்.

17ஆம் நூற்­றாண்டில் பர்­மாவில் குடி­யே­றிய போர்த்­து­கீ­சியக் கத்­தோ­லிக்­கர்­களும் சிரியம் என்ற நகரில் வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

அவர்­களும் பர்­மிய மொழியே பேசி வரு­கின்­றார்கள். ஆனால் பல நூறு ஆண்­டு­க­ளாக வாழ்ந்து வரு­ப­வர்­க­ளாகக் கூறிக் கொள்ளும் ரோஹிங்­யாக்கள் பல­ருக்கு சுத்­த­மாகப் பர்­மிய மொழியோ, அராக்­க­னிய மொழியோ பேசத் தெரி­யாது.

உடை, நடை, பாவ­னைகள், உணவு பழக்க வழக்கம், உருவ ஒற்­றுமை எனப் பல­வற்­றிலும் ரோஹிங்யாக்கள் பர்­மி­யர்­க­ளோடு ஒத்துப் போவதே இல்லை.

சில நூறு ஆண்­டு­க­ளுக்கு முன் வந்த தமி­ழர்­களே பர்­மிய மொழி சர­ள­மாகப் பேசும் போது ஏன் இவர்­களால் பேச முடி­ய­வில்லை என்­பதை நாம் கவ­னிக்க வேண்டும் ?

இந்த இனக்­க­ல­வரம் ஏதோ இப்­போ­துதான் புதி­தாக நடக்­கி­றது என்­றில்லை. இது காலம் கால­மாக நடந்து­கொண்­டுதான் வரு­கி­றது.

கிட்­டத்­தட்ட பதி­னைந்து ஆண்­டு­க­ளுக்குள் பல முறை ரோஹிங்­யாக்கள் மீது வன்­முறை கட்­ட­விழ்த்­து­வி­டப் ­பட்­டுள்­ளது.

ஆனால், அப்­போது இதை­யெல்லாம் இவ்­வ­ளவு பெரி­தாக சித்­தி­ரிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் தற்­போது ஜன­நா­யக ஆட்­சியைத் தழுவ நினைக்கும் மியன்­மாரில் பிரச்­சி­னை­களை உண்டு பண்­ணவும், சீனச் சார்பு நிலையில் இருந்து அமெ­ரிக்கச் சார்பு நிலைக்கு மாறி வரும் மியன்மார் மீது அழுத்­தங்­களைக் கொடுக்­கவே இப்­ப­டி­யான கல­வ­ரங்கள் தூண்­டப்­பட்டு, அவற்றைப் பற்­றிய பல அவ­தூறு செய்­தி­களைப் பரப்பி வரு­வ­தா­கவும் சொல்­லப்­ப­டு­கி­றது.

சட்ட விரோ­த­மாகக் குடி­யேறும் எந்­த­வொரு மக்­க­ளையும் எந்­த­வொரு அரசும் குடி­யு­ரிமை வழங்­கி­விடாது. அப்­படி வழங்­கி­வி­டு­வதும் அவ்­வ­ளவு எளி­தான ஒரு காரி­யமும் அல்ல.

ஆனால் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் சில ஏற்­பா­டு­களை அவர்­க­ளுக்கு செய்­து­கொ­டுக்­கலாம்.

உலகில் சில இனங்கள், நாடற்­ற­வர்கள் என்ற அடை­மொ­ழிக்குள் அடங்­கு­வார்கள். அதா­வது, அவர்களுக்கு எந்த நாட்டின் பிர­ஜா­வு­ரி­மையும் கிடை­யாது. ஆனால், சர்­வ­தேச சட்­டங்கள் புரிந்து கொள்ளும், நாடற்­றவர் என்ற சொல்லின் அர்த்தம் வேறு.

எந்த நாட்­டி­னதும் பிர­ஜா­வு­ரிமை இல்­லா­த­ப­டியால், அவர்­க­ளுக்கு கட­வுச்­சீட்டு எடுக்க முடி­யாது. அதனால், அவர்கள் வாழும் பிர­தே­சத்தை விட்டு வெளி­யேற முடி­யாது.

ஐ.நா., இவர்கள் நாடற்­ற­வர்கள் என்று அங்­கீ­க­ரித்தால், ஒரு சில தீர்­வுகள் காணப்­ப­ட­மு­டியும். வெளிநாடு செல்ல வேண்­டிய தேவை­யுள்­ள­வர்கள், இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுடன் பிர­யாணம் செய்ய முடியும்.

ஆனால், ரோஹிங்­யா வங்­கா­ளி­களின் நிலைமை வேறு. ஐ.நா., அல்­லது சர்­வ­தேச நாடுகள் எதுவும், அவர்­களை ஒரு தேசிய இன­மாக அங்­கீ­க­ரிக்­க­வில்லை.

பர்­மிய அரசின் நிலைப்­பாட்டை சொல்லத் தேவை­யில்லை. மேற்­கத்­திய நாடு­க­ளினால் “கண­வாட்டி” என்று மதிக்­கப்­படும் ஆங் சங் சூகி கூட, ரோஹிங்­ய வங்­கா­ளி­களை வெளி­நாட்டு குடி­யே­றி­க­ளாக தான் கரு­து­கின்றார்.

பர்­மாவில் இரா­ணுவ சர்­வா­தி­கார ஆட்சி நடத்­திய ஜெனரல் நீ வின், 1982ஆம் ஆண்டு, ரோஹிங்யாக்களின் குடி­யு­ரி­மையை பறித்த பின்னர் தான் அவர்­க­ளது அவலம் ஆரம்­ப­மா­கி­யது.

இறு­தி­யாக நடந்த இந்தக் கல­வ­ரத்தின் ஆரம்­பத்தில், இரண்டு இனங்­க­ளுக்கு இடை­யி­லான இனக்கலவர­மா­கவே தோன்­றி­யது. கல­வரம் ஆரம்­பித்த முத­லா­வது வாரம், இரண்டு பகு­தி­யிலும் 29 பேர் மாண்­டனர்.

2500 வீடுகள் எரிக்­கப்­பட்­டன. ஒன்­பது விகா­ரை­களும், ஏழு மசூ­தி­களும் சேத­மாக்கப் பட்­டன. ஆனால், மிக விரை­வி­லேயே பௌத்த ராகின்­களின் கை ஓங்­கி­யது.

மியன்மார் அரசும், இரா­ணு­வமும் அவர்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக நின்­றன. நிலை­மையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக கூறிக்­கொண்டு, இரா­ணுவம் ஊர­டங்குச் சட்டம் பிறப்­பித்­தது.

ஆனால், அது ரோஹிங்­யாக்­களை வீட்­டுக்குள் முடங்க வைக்கும் சதித் திட்டம் என்பது பின்னர் தெளிவானது. ரோஹிங்யாக்களை வேட்டையாடியவர்களை ஊரடங்குச் சட்டம் ஒன்றும் செய்யவில்லை.

பல வீடு­களில், ரோஹிங்­யாக்­களின் பிணங்கள் மட்­டுமே கிடந்­தன. அங்கே ஒரு திட்­ட­மிட்ட இனப்­ப­டு­கொலை நடந்து கொண்­டி­ருந்­தது.

ரோஹிங்­­யாக்­க­ளுக்கு குடி­யு­ரிமை இல்­லா­த­தனால், அவர்­க­ளுக்கு அடிப்­படை மனித உரி­மைகள் எதுவும் கிடை­யாது.

உயர்­கல்வி கற்க முடி­யாது. ஒரு நிறு­வ­னத்தில் பதவி வகிக்க முடி­யாது. வர்த்­தகம் செய்ய முடி­யாது. இவை எல்­லா­வற்­றையும் விட, திரு­மணம் செய்­வ­தற்கு கூட இரா­ணுவ உயர் அதி­கா­ரி­களின் அனு­மதி பெற வேண்டும் என்­பது கொடு­மை­யிலும் கொடுமை.

அதுவும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது.

இப்­போ­தைக்கு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பவர்களின் உட­னடி தேவை சொந்­த­மாக ஒரு நாடு அல்ல…

படகு களிலிருந்து இறங்கு வதற்கு ஒரு நாடு அவ்வளவு தான்…

On Wednesday, more than 400 Rohingya were rescued by fishermen from a green wooden boat, whose fate had captured worldwide attention after harrowing scenes emerged of desperate migrants pleading for help when the trawler was found by media floating off Thailand.

In the past three weeks, more than 3,000 migrants who fled persecution in Myanmar and poverty in Bangladesh have landed in overcrowded boats on the shores of Southeast Asian countries better known for their white-sand beaches. Aid groups estimate that thousands more are stranded at sea following a crackdown on human traffickers that prompted captains and smugglers to abandon their boats.

A Rohingya migrant mother watches as her child drinks water after they arrived by boat at the port of Julok village in Kuta Binje

A Rohingya woman and her children eat after arriving at the port in Julok village in Kuta Binje, Aceh Provinc
Rohingya migrants who arrived by boat, queue up for identification at a temporary shelter in the port of Julok village in Kuta Binje
Rohingya children from Burma rest in the compound of a mosque in Julok district, Aceh province after they were rescued by Indonesian fishermen off the waters of the eastern coast of Aceh. Hundreds of starving boatpeople were rescued off Indonesia on May 20 as Myanmar for the first time offered to help ease a regional migrant crisis blamed in part on its treatment of the ethnic Rohingya minority.
Share.
Leave A Reply

Exit mobile version