இஸ்லாமிய வரலாற்றாசிரியரான இப்ன்-வராக் காஃபிர் அடிமைகளைப் பற்றிக் கூறுகையில்,

“இஸ்லாமிய சட்டப்படி கைப்பற்றப்பட்ட அடிமைகளுக்குச் சட்ட ரீதியாக எந்த உரிமைகளும் இல்லை. அவர்கள் வெறும் வியாபாரப் பொருட்கள் மட்டுமே.

அவர்களை அடிமைப்படுத்திய முஸ்லிம் அந்த அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அடிமைச் சந்தையில் விற்கலாம். அவர்களுடன் உடலுறவு கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல அந்த அடிமைகள் வேலை செய்து சம்பாதிக்கும் பணம் அனைத்தும் அவர்களின் உரிமையாளனான முஸ்லிமுக்கே சொந்தம்.

எந்த அடிமையும் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல அனுமதியில்லை. அந்த அடிமை முஸ்லிமாக மதம் மாறினாலும் அவனது நிலைமையில் முன்னேற்றமோ அல்லது அவன் விடுதலை செய்யப்படுவதோ நடக்கும் என்று சொல்வதற்கில்லை.

அவன் மதம் மாறிய காரணத்தால் அவனை விடுதலை செய்ய அவனது உரிமையாளனான முஸ்லிமுக்கு கட்டாயமில்லை.”

islam-jihad-slavery-arabSlaveMarket

அடிமையை விலைக்கு வாங்கிய உரிமையாளன் அந்த அடிமையின் உடலின் ஏதேனும் குறைபாடுகளைக் கண்டுபிடித்தால் அவனை அடிக்கவும், வெளிக் காயம் தெரியாத வகையில் துன்புறுத்தவும் இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது.

ஃபாத்வா-இ-ஆலம்கிரியில் எழுதியுள்ளபடி, அவ்வாறு உடல் குறைபாடுள்ள அடிமையை வாங்கியவனுக்கு, அந்த அடிமையை அடித்துத் துன்புறுத்தியதால் உண்டான காயம் வெளியில் தெரியும்படியாக இல்லாதிருக்கும் பட்சத்தில், விற்றவன் முழுப் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பனிரெண்டாம் நூற்றாண்டின் கடுமையான இஸ்லாமிய சட்டமான ஹெடாயா என்றறியப்படும் ஹனாஃபி சட்டம், “திருட்டு செய்யும் ஒரு அடிமையின் கையையோ அல்லது காலையோ வெட்டுவது இஸ்லாமிய சட்டத்தின்படி தவறில்லை” என்று கூறுகிறது.

பொதுவாக இஸ்லாமிய சட்டம் அடிமைகளை நல்ல முறையில் நடத்தவேண்டும் என்று கூறினாலும், ஒரு உரிமையாளன் தனக்குச் சொந்தமான ஒரு அடிமையை அடித்துக் கொன்றாலும் அது சாதாரண மரணமாக கருதப்படவேண்டும் என்றே கூறுகிறது.

இவ்வாறு அடிமைகள் விலங்குகளைப் போல நடத்தப்படுவதால் அவர்களுக்கு உண்டாகும் மன வேதனையும், உளைச்சலும், சுய மரியாதையை இழந்து நிற்கும் அந்த அடிமையைப் பெரிதும் பாதிக்கவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

காஃபிர்களை அடிமைகளாகப் பிடிக்கும் இஸ்லாமியர்கள் அவர்களை சந்தைகளிலும், நாற்சந்திகளிலும் நடக்க விட்டுக் கேவலப்படுத்து சாதாரணமாகக் காணக்கிடைத்த ஒன்று.

ஒரு அரசனோ அல்லது உயர் பதவியில் இருந்த ஒருவரோ அவ்வாறு நடத்தப்படுகையில் உண்டாகும் துயரம் வார்த்தையில் அடங்காதது.

உதாரணமாக, சுல்தான் முகமது காபூலை ஆண்ட இந்து அரசனான ஜெய்பாலைக் கைது செய்து அவரது குடும்பத்தினர், உறவினர்களுடன் கஜினியை நோக்கி நடத்திச் சென்றான்.

அவ்வாறு செல்கையில் அவருக்கு சுல்தான் முகமது தொடர்ந்து அவமரியாதைகள் செய்தான். கஜினியின் அடிமைச் சந்தையில் அரசர் ஜெய்பால் ஒரு சாதாரண அடிமையைப் போல விற்பனை செய்யப்பட்டார்.

அவரது மனைவியர், மகன்கள் மற்றும் உறவினர் முன்பு இவ்வாறு அடிமையைப் போல நடத்தப்பட்ட ஜெய்பால் வேதனையுடன் மனமுடைந்து போனார். இறுதியில் உயிர் பிழைத்து அடிமையாக வாழ்வதனை விடவும் மரணமே மேல் என்று தீயில் குதித்து இறந்து போனார்.

இந்தியாவில் மட்டுமல்லாது இஸ்லாமிய ஆட்சி நிலவிய மற்ற நாடுகளிலும் இதுவே நிகழ்ந்தது. மொராக்கோ நாட்டு சுல்தான் மவுலே இஸ்மாயில் (1727) காலத்தில், கடலில் நடத்தியதொரு தாக்குதலில் பிடிக்கப்பட்ட வெள்ளை இனத்து அடிமைகள் ஏதோவொரு மொராக்கோ நாட்டுக் கடற்கரை நகரத்துக் கொண்டு வரப்பட்டார்கள்.

அவர்களுடன் வந்த வெள்ளையரான் கேப்டன் ஜார்ஜ் எலியட் (George Elliot), அவருடைய சக வெள்ளை நிறத்தவருடன் கடற்கரையை அடைந்தவுடன் ஏராளமான குண்டர்கள் காட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு அவர்களைச் சூழ்ந்து கொண்டதாகவும், பின்னர் அவர்களை ஆடு, மாடுகளை நடத்திச் செல்வது போல அந்தக் கடற்கரை நகரத்தின் பல தெருக்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்று எழுதுகிறார்.

அடிமைகளின் மனவேதனையை விட பசியாலும், தாகத்தாலும், நோயாலும் அடையும் துன்பமே பெரிதானது.

கைப்பற்ற உடன் துவங்கும் இந்தத் துன்பம் அவர்கள் வந்தடைய வேண்டிய அடிமைச் சந்தை வரைக்கும் தொடர்ந்து வரும்.

அவ்வாறு அவர்கள் சென்றடைய வேண்டிய நகரமோ அல்லது அடிமைச் சந்தையோ ஆயிரம் மைல்களுக்கும் அப்பால், அவர்களுக்கு அறிமுகமே இல்லாததொரு தேசத்தில் இருக்கும். காடுகளிலும், மலைகளிலும், பனியிலும், குளிரிலும், வெயிலிலும் அவர்கள் நடத்தி அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அத்துடன் கைப்பற்றப்பட்ட அடிமைகள் அனைவரும் விற்பனை செய்து முடிக்கப்படும் வரையிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பார்கள்.

சில சமயங்களில் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் அந்த அடிமைகளை வாங்கி விற்கப்பட்டிருப்பார்கள். மதத்தின் பெயரால் சக மனிதர்களுக்குச் செய்யும் இந்தச் செயல் கற்பனை செய்து பார்ப்பதற்கே அச்சமூட்டுவது என்பதில் சந்தேகமில்லை.

இந்த அடிமைகள் எவ்வாறு நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக மீண்டும் காபூல் அரசர் ஜெய்பாலைக் குறித்துப் பார்க்கலாம்.

சுல்தான் முகமதின் வரலாற்றாசிரியரான அல்-உத்பி, “அரசன் ஜெய்பாலும், அவனது மகன்கள், பேரக் குழந்தைகள், உறவினர்கள், ராஜாங்க உயரதிகாரிகள் என்று பலரும் சுல்தான் முகமதினால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் உறுதியான கயிற்றால் கட்டப்பட்டு சுல்தானால் இழுத்துச் செல்லப்பட்டார்கள்…..

சிலரின் கைகள் வலுக்கட்டாயமாக பின்னால் கட்டப்பட்டிருந்தன..மற்றும் சிலரின் கழுத்தைச் சுற்றிக் கயிறு கட்டப்பட்டிருந்தது…இன்னும் பலரின் கழுத்தில் தொடர்ந்து அடிக்கப்பட்டு நடத்திச் செல்லப்பட்டார்கள்….”

இதில் ஒரு விஷயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். சுல்தான் முகமது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் படையெடுத்துச் சென்று மாதக் கணக்கில் முற்றுகையில் ஈடுபட்டு வந்தவன்.

அந்தப் போர்களில் அடைந்த வெற்றிகள் காரணமாகப் பல இலட்சக்கணக்கான அடிமைகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டார்கள்.

அவ்வாறு பிடிக்கப்பட்ட அடிமைகள் கயிற்றால் பிணைக்கப்பட்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த கஜினியை நோக்கி நடத்திச் செல்லப்பட்டார்கள்.

இவ்வாறு நடத்திச் செல்லப்பட்ட அடிமைகளில் பெரும்பாலோர் பெண்களும், குழந்தைகளும் என்பதினையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கால்களுக்குச் செருப்பில்லாமல் காடுகளிலும், மலைகளிலும் நடத்திச் செல்லப்பட்ட அந்தப் பெண்களும், குழந்தைகளும் சில சமயம் மாதக் கணக்கில் பயணம் செய்ய நேரிடும். எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கும் செயல் இது.

இவ்வாறு பல்லாயிரக் கணக்கானவர்கள் நடந்து செல்லும் வழியில் அவர்களுக்கு உணவோ, தண்ணீரோ கிடைக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.

அத்துடன் செல்லும் வழியில் நோயுற்றவர்களுக்கு எந்தவிதமான மருத்துவ வசதியும் கிடைத்திருக்கும் வாய்ப்பே இல்லை.

நடக்க இயலாதவர்கள், நோயாளிகள் போன்றவர்கள் கைவிடப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். எண்ணிப் பாருங்கள். அறிமுகமில்லாத ஒரு நாட்டில், மலையில் அல்லது காட்டில் தனது உற்றார், உறவினரை இழந்து, உணவும், நீரும் கிடைக்காமல் கைவிடப்பட்டு இறக்க நேரிடுவதைப் போன்றதொரு கொடூரம் வேறொன்றுமில்லை.

அத்தனையும் மதத்தின் பெயரால் மனிதன் சக மனிதனுக்குச் செய்தான். அதையும் விட அது அல்லாவால் அளிக்கப்பட்ட ஆணை என்றும் கூறி எவ்விதமான குற்றவுணர்வும் இன்றி இவ்வன்செயல்கள் நடந்தேறின. நடந்து கொண்டிருக்கின்றன.

ராஜஸ்தானின் ஜாலூர் நாட்டை ஆண்ட இந்து அரசன் கன்ஹர்தேவாவின் மீது உலுக்-கான் பால்பனின் தாக்குதலைக் குறித்தும், அந்தப் போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் துயரம் குறித்தும் அதனை நேரில் கண்ட பிரபந்தா இவ்வாறு கூறுகிறார்,

“பகல் நேரங்களில் பாலைவனத்து வெயில் மண்டையப் பிளந்தது. இரவு நேரங்களிலோ திறந்து கிடந்த பாலைவனத்தின் குளிர் வாட்டி வதைத்தது.

வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட, தங்களின் தாயின் முலைகளிலிருந்து பிடுங்கப்பட்ட குழந்தைகளின் அழுகைச் சத்தம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு அடிமையின் துன்பமும் மற்றவனை விடவும் அதிகமாகவிருந்தது. பசியிலும், தாகத்திலும் அந்த மனிதக்கூட்டம் துடித்துக் கொண்டிருந்தது….அதற்கும் மேலாக பல நோயுற்றவர் உட்காரவியலாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். காலில் அணிந்து கொள்ளப் பலருக்குச் செருப்புகள் இல்லை. மற்ற சிலருக்கோ அணிந்து கொள்ளக்கூட ஆடைகளில்லை….”

தொடரும் பிரபந்தா,

“பலரின் கால்கள் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தன. இன்னும் சிலரோ தோல் பட்டைகளால் பிணைக்கப்பட்டுக் கிடந்தார்கள்.

பிள்ளைகள் தங்களின் அன்னையரிடமிருந்து பிரிந்து திரிந்தார்கள். மனைவிகள் கணவன்களிடமிருந்து….சிறிதும் ஈவிரக்கமற்ற இந்தத் தாக்குதல்களின் காரணமாக.

முதியவர்கள், இளைஞர்கள் என்ற பேதமில்லாமல் அனைவரும் வலியாலும், பசியாலும் துடித்துக் கொண்டிருந்தார்கள்….ஏதாவதொரு அதிசயம் நிகழ்ந்துத் தங்களை இந்த இன்னல்களிலிருந்து காப்பாற்றி விடாதா என்னும் நப்பாசையுடன் பலர் கண்ணீர் சிந்திப் புலம்பியவண்ணமிருந்தார்கள்….”

கவனியுங்கள். இந்தத் துன்பமெல்லாம் கைப்பற்றப்பட்ட சிறிது நாட்களில் நடந்தவை. நாட்கள் செல்லச் செல்ல அந்த அடிமைகளின் துயரங்கள் அதிகமுறுமேயன்றி குறைவதற்கான எந்த வழியுமில்லை.

இன்னும் பல ஆயிரக்கணக்கான மைல்கள் அவர்கள் நடந்து செல்ல வேண்டும். மாதக் கணக்கில் அந்தப் பயணம் இருக்கும். எண்ணிப் பார்க்கவே குலை நடுங்கும் பயங்கரமது.

இந்தியர்களுக்கும் மட்டும் நடந்த துயரமல்ல இது. ஆப்பிரிக்காவில் பிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கறுப்பர்கள் இவ்வாறு நடத்தி வரப்பட்டார்கள்.

மத்திய ஆசிய நாடுகளிலும் ஏன் இந்தியாவிலும் கூட இந்தக் கறுப்பர்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். வெள்ளையர்களும் இதில் பாதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் ஆச்சரியம்.

1687-ஆம் வருடம், மொராக்கோ சுல்தான் மவுலே இஸ்மாயில் பிரஞ்சு நகரமான ட்ரவுடெண்டடைத் (Taroudant) தாக்கி அங்கிருந்த பலரையும் கொலை செய்தான்.

பின்னர் 120 பிரஞ்சுக்காரர்களை அடிமைகளாகப் பிடித்தான். அவ்வாறு பிடிக்கப்பட்ட வெள்ளைக்காரர்கள் குண்டாயிருப்பதாகக் கூறி ஏறக்குறைய ஒரு வாரம் வரைக்கும் அவர்களுக்கு உணவளிக்கப்படவில்லை.

உணவு கேட்டு அழுது புலம்பிய அவர்களை உடனடியாக தனது தலைநகரான மெக்னஸுக்கு நடத்திச் செல்ல உத்தரவிட்டான் சுல்தான். அவ்வாறு 300 மைல்களுக்கும் மேலாக நடத்திச் செல்லப்பட்டவர்களைப் பற்றி பிரஞ்சு அடிமையான ஜான் லாடிர் (Jean Ladire) குறிப்புகள் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்.

அதன்படி, பிரஞ்சு அடிமைகள் சங்கிலிகளினால் பிணைக்கப்பட்டு ஆட்டு மந்தைகளைப் போல ஓட்டிச் செல்லப்பட்டார்கள். நோயும், பசியும் அவர்களை வாட்டி வதைத்தன. பலர் இறந்து விழுந்தார்கள்.

சந்தேகப் பிராணியான தங்களின் சுல்தான், அவனுக்குத் தெரியாமல் தாங்கள் அந்த அடிமைகளை விற்று விட்டதாக சந்தேகித்து தண்டனை அளித்துவிடுவான் என்று அஞ்சிய காவலர்கள், அவ்வாறு இறந்தவர்களின் தலையை வாளினால் துண்டித்து, உயிர் பிழைத்தவர்களிடம் கொடுத்து, அதனைச் சுமந்து செல்லும்படி வலியுறுத்தினார்கள்.

ஆப்பிரிக்காவை நோக்கி நடத்திச் செல்லப்பட்ட அவர்கள் தரைக்கடியில் அமைக்கப்பட்டிருந்த மட்டமோர் (matamore) என்னும் சிறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள்.

காற்றுப் புகாத அந்த அறையில் அடைக்கப்பட்ட் அடிமைகளுக்குச் சிறிதளவு ரொட்டியும், நீரும் மட்டுமே வழங்கப்பட்டது.

ஒவ்வொரு அடிமைச் சந்தை நாளின் போதும் உள்ளிறக்கப்படும் கயிற்று ஏணியின் உதவி கொண்டு வெளி வரும் அந்த அடிமைகள் பின்னர் விற்பனை செய்யப்பட்டார்கள்.

அவர்கள் அடைந்த துன்பங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் அடிமையான ராபர்ட் ஆடம்ஸ் என்பவரும் இதனைக் குறித்து விளக்கமாகவே குறிப்புகள் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். அத்தனையையும் எழுதிட இங்கு இயலாத காரணத்தால் இதனை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

(தொடரும்)

வன்முறையே வரலாறாய்…- 33

Share.
Leave A Reply

Exit mobile version