பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவில் 8 கால்கள் கொண்ட விசித்திரமான நாய்க்குட்டி ஒன்று பிறந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டோங்கா தீவில் உள்ள வைனி என்ற இடத்தில் 5 குட்டிகளுடன் சேர்ந்து இந்த அதிசய நாய்க்குட்டி பிறந்துள்ளது. இந்த நாய்க்குட்டியின் வயிற்றுக்குக் கீழே ஒட்டியுள்ள அதன் 2 உடல்களின் காரணமாக 2 பின்னங்கால்களும் 2 வால்களும் உள்ளது.

உடலின் மேற்புறத்தில், முன்புறம் ஒரு முன்னங்கால், பின்புறம் மற்றொரு முன்னங்கால் என ஒட்டு மொத்தமாக எட்டு கால்கலுடன் இந்த விசித்திர நாய்க்குட்டி பிறந்துள்ளது.

ஆடு மற்றும் பூனைகள் இது போன்று விசித்திரமான தோற்றத்துடன் பிறப்பது வழக்கம். ஆனால் நாய்கள் இது போன்ற விசித்திர தோற்றத்துடன் பிறப்பது மிகவும் அபூர்வமானது என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாயின் உரிமையாளரான மலோனி கூறுகையில் “ இந்த அதிசய நாய்க்குட்டி பிறந்ததும் தீவில் உள்ள மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் உறைந்துவிட்டனர்.

நான் இதற்கு முன்பு எங்கும் 8 கால்கள் கொண்ட ஒரு குட்டி நாயைப் பார்த்தது கிடையாது. இந்த குட்டி பிறந்ததும் கத்துவதற்குக் கூட சிரமப்பட்டது.

தீவில் கால்நடை மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் பிறந்த சில மணி நேரங்களிலேயே இந்த மண்ணை விட்டு மறைந்தும் விட்டது.” என்று சோகத்துடன் கூறியுள்ளார்.

 

292E6C0D00000578-3102744-image-a-1_1432979962267

Share.
Leave A Reply

Exit mobile version