மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வெல்­லா­வெளி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிர­தே­சமே மண்டூர். அமை­தி­யாக இருந்த அந்­தப்­பி­ர­தே­சத்தின் அமைதி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முற்­பகல் அடை­யாளம் தெரியாத ஆயு­த­தா­ரி­களால் குலைக்­கப்­பட்­டது.

ஆம், சத்தியானந்தம் மதி­தயன் (42 வயது). மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் நாவி­தன்­வெளி பிர­தேச செய­ல­கத்தில் சமூக சேவை அதி­கா­ரி­யாக கட­மை­யாற்றி வந்­தவர். அமை­தி­யா­னவர். வீண் வம்­புக்கு செல்­லா­தவர்.

சமூ­கத்தை நேசித்­தவர். இப்­ப­டி­யெல்லாம் கூறிக்­கொண்டே செல்ல முடி­யு­மான அவரை கடந்த செவ்வா­யன்று முற்­பகல் 9.15 மணி­ய­ளவில் மோட்டார் சைக்­கிளில் வந்த அடை­யாளம் தெரியாதவர்கள் சுட்­டுக்­கொலை செய்து மண்­டூரில் பர­ப­ரப்­பையும் அச்­சத்­தையும் விதைத்­தனர்.

பிர­தே­சத்தில் அனை­வ­ராலும் அறி­யப்­பட்ட மதி­தயன் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்ட செய்தி காட்­டுத்தீ போல் ஊரெங்கும் பரவ உட­ன­டி­யாக ஸ்தலத்­திற் விரைந்த பொலிஸார் விசேட விசார­ணையை ஆரம்­பித்­தனர்.

மட்­டக்­க­ளப்­புக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்சர் ஜய­சிங்­கவின் மேற்­பார்­வையின் கீழ் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சிசி­ரவின் ஆலோ­ச­னையின் பிர­காரம் வெல்­லா­வெளி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரசிக சம்­பத்தின் நேரடி கட்­டுப்­பாட்டில் அப்­பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வி­னரால் இந்த விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

நேற்று காலை வரை இந்த படு­கொலை தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் பிர­காரம் துப்­பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்­பிச்­சென்ற சந்­தேக நபர்கள் அடை­யாளம் காணப்படாத போதும் பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் குறிப்­பி­டத்­தக்க அள­வான முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக மதி­தயன் ஏன் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார் என்ற கேள்­விக்கு விடை தேடும் பொலிஸார் இரு முக்­கி­ய­மான விட­யங்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக அறிய முடிகின்றது. அதா­வது மதி­த­ய­னுடன் தொடர்­பு­பட்ட இரு முரண்­பா­டு­க­ளான விட­யங்கள் தொடர்­பி­லேயே இந்த அவ­தானம் செலுத்­தப்­பட்­டது.

அத்­துடன் சந்­தேக நபர்­களை அடை­யாளம் கண்டு அவர்­களை கைது செய்ய அறி­வியல் ரீதி­யான தட­யங்­களை பெற்று வரும் பொலிஸார் இது­வரை சம்­பவம் தொடர்பில் 10 முதல் 15 வரையான வாக்கு மூலங்­களை பதிவு செய்து கொண்­டுள்­ளனர்.

அதன்­படி கடந்த 26 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை காலை 9 மணி கடந்த நிலையில் மண்­டூரில் உள்ள மதி­தயன் வீட்­டுக்கு மோட்டார் சைக்­கிளில் இருவர் வந்­துள்­ளார்கள். ஒருவர் தலைக்கவசம் அணிந்­தி­ருந்­துள்ள நிலையில் மற்­றை­யவர் கையில் தலைக்­க­வசம் இருந்­துள்­ளது.

இதனை மதி­த­யனின் மனைவி அவ­தா­னித்­துள்ள போதும் தனது கணவர் அலு­வ­லகம் செல்­லா­ததால் அவரின் சேவை­யொன்றை நாடி எவ­ரேனும் வந்­தி­ருக்­கலாம் என எண்ணி வந்தவர்களை நோட்­ட­மி­டாது சமை­ய­ல­றைக்கு சென்று தேநீர் தயா­ரித்­துள்ளார்.

கடந்த திங்­கட்கிழமையன்று கொழும்­புக்கு வந்­தி­ருந்த மதி­த­யனின் கழுத்தில் ஒரு சத்­திர சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. அத­னை­ய­டுத்தே அவர் செவ்­வா­யன்று அலு­வ­லகம் செல்லாது வீட்டில் விடு­மு­றையில் இருந்­துள்ளார்.

இந்­நி­லையில் மனைவி தேநீர் தயா­ரிக்கும் போது மதி­த­யனும் மோட்டார் சைக்­கிளில் வந்­தோரும் உரை­யாடிக் கொண்­டி­ருந்­தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை மதிதயனின் மனைவியால் முழு­தாக கேட்­கவோ அல்­லது அனு­மா­னிக்­கவோ முடியா விட்­டாலும் “அப்­படி செய்ய முடி­யாது” போன்ற சில வார்த்­தைகளை மதி­தயன் கூறு­வது மனைவி காது­களில் விழுந்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இந்­நி­லை­யிலே சில நிமி­டங்­களில் மதி­த­ய­னுடன் பேசிக்­கொண்­டி­ருந்­த­வர்கள் அவர் மீது துப்­பாக்கி பிர­யோகம் செய்து விட்டு தப்­பிச்­சென்­றுள்­ளனர்.

மதி­த­யனை 9 மில்லி மீட்டர் ரக துப்­பாக்­கியின் இரு சன்­னங்கள் பதம் பார்த்­துள்­ள­துடன் வெற்­றுத்­தோட்­டாக்­க­ளையும் சந்­தேக நபர்கள் பொறுக்கி தட­ய­மற்ற நிலையில் தம்­மு­ட­னேயே எடுத்து சென்­றுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. மதி­த­யனின் தலையின் பின்­பு­ற­மாக இரு துப்­பாக்கி குண்­டு­களும் பாய்ந்­துள்­ளன.

இந்­நி­லை­யி­லேயே சத்தம் கேட்டு சமை­ய­ல­றையிலிருந்து ஓடி வந்­துள்ள மனைவி கண­வ­னான மதி­தயன் இரத்த வெள்­ளத்தில் கிடப்­பதை கண்டு கதறி அழ முழு மண்­டூரும் மதி­த­யனின் வீட்டில் கூடி­யது. இத­னை­ய­டுத்தே பொலிஸார் அங்கு விரைந்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இந்த கொலை­யா­னது மிகத்­திட்­ட­மிட்ட முறையில் செய்­யப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கி­றது. மதி­தயன் அன்று அலு­வ­லகம் செல்­லாத நிலை­யி­லேயே வீடு தேடி வந்து அவரை கொலை செய்திருக்­கலாம் என சந்­தே­கிக்கும் படி­யான தக­வல்­களும் பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்­ளன.

குறிப்­பாக மோட்டார் சைக்­கிளில் வந்த அடை­யாளம் தெரி­யாத நபர்கள் இரு­வரும் மதி­தயன் அலு­வ­லகம் செல்லும் வழியில் உள்ள சிகை­ய­லங்­கார நிலையம் ஒன்­றுக்கு முன்­பாக நீண்ட நேரம் காத்­தி­ருந்­த­தா­கவும் பின்னர் வீடு தேடி சென்று அவர்கள் இந்த படு­கொ­லையை அரங்­கேற்­றி­யுள்­ள­தா­கவும் மண்டூர் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவான் குண­சே­க­ரவின் தக­வல்­களின் பிர­காரம் பெறப்­பட்­டுள்ள வாக்கு மூலங்கள், அறி­வியல் தடயங்கள் மற்றும் புலன் விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்கு கிடைத்­துள்ள சிற் சில தக­வல்­களை வைத்து சந்­தேக நபர்­களை கைது செய்­வ­தற்­கான விசா­ர­ணைகள் முடுக்கி விடப்­பட்­டுள்­ள­தாக அறிய முடிந்­தது.

இந்­நி­லையில் வெல்­லா­வெளி பொலிஸார் தமது விசா­ர­ணை­களில் மதி­த­ய­னுக்கு இருந்த முரண்­பா­டுகள் குறித்து அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். பொலி­ஸாரின் தக­வல்­க­ளின்­படி பிரதேசத்தில் பிர­சித்தி பெற்ற ஆலயம் ஒன்றின் பரி­பா­லனசபை மாற்றம் தொடர்பில் மதி­தயன் முன்­னின்று உழைத்­துள்ளார்.

இதனால் மாற்­றப்­பட்ட பரி­பா­லன சபை உறுப்­பி­னர்­க­ளுக்கும் மதி­த­ய­னுக்கும் ஆரோக்­கி­ய­மா­ன­தொரு உறவு காணப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் அது தொடர்பில் பொலி­ஸாரின் அவதானம் திரும்­பி­யுள்­ளது.

எனினும் அந்த முரண்­பா­டுகள் கொலைக்­கான உறு­தி­யான காரணம் என நேற்­று­வரை கண்­ட­றி­யப்­பட்­டி­ராத நிலையில் விசா­ர­ணைகள் தொடர்­வ­தாக பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரசிக சம்பத் சுட்­டிக்­காட்­டினார்.

குறிப்­பாக குறித்த ஆலய பரி­பா­லனம் பூஜைகள் தொடர்­பான வழக்­கொன்றும் நிலு­வையில் உள்­ள­தாக அறிய முடி­கின்­றது. தற்­போது ஒரு தற்­கா­லி­க­மான பரி­பா­லன சபை­யொன்று அவ்வால­யத்தை நிர்­வாகம் செய்­வ­தா­கவும் புதிய பரி­பா­லன சபை ஏற்­ப­டுத்­தப்­பட மதி­தயன் முன்­னின்று உழைத்­தவர் எனவும் கரு­தப்­ப­டு­கி­றது.

எது எப்­படி இருப்­பினும் மதி­தயன் கொலைக்கு இந்த ஆல­யப்­பி­ரச்­சினை தான் காரணம் என இன்னும் பொலிஸார் கண்­ட­றி­யவோ உறுதி செய்­யவோ இல்லை. மாற்­ற­மாக அதனை விசாரணையின் ஒரு அங்­க­மா­கவே கொண்­டுள்­ளனர்.

பொலி­ஸாரின் தக­வல்­களின் பிர­காரம் முரண்­பாடு அல்­லது பகைமை என்ற ரீதியில் மதி­த­ய­னுக்கு மேற்­கு­றிப்­பிட்ட சம்­பவம் மட்­டுமே காணப்­படும் நிலையில் வேறு காரணம் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

அதா­வது மண்டூர் தக­வல்­களின் பிர­காரம் கடந்த ஏப்ரல் மாதம் இறு­தியில் நாவி­தன்­வெளி, மாவடி வேம்பு பிர­தே­சத்தில் மது­பா­ன­சா­லை­யொன்றை அகற்­றக்­கோரி இடம்­பெற்ற பொதுமக்கள் ஆர்ப்­பாட்­டத்தில் மதி­த­யனின் பங்கு அளப்­ப­ரி­யதாக இருந்ததாக தெரியவருகிறது.

பிர­தே­சத்தின் மத­கு­ருமார் கல்­வி­மான்கள், புத்­தி­ஜீ­விகள், அர­சி­யல்­வா­திகள் என பலரும் இதில் கலந்து கொண்­டுள்­ளனர். கடந்த 9 வரு­டங்­க­ளாக குறித்த மது­பான கடை இயங்கி வரும் நிலையில் அதற்கு அருகே பாட­சாலை, வைத்­தி­ய­சாலை, ஆல­யங்கள் மற்றும் பொது­மக்கள் குடி­யி­ருப்­புக்கள் என பலவும் காணப்­ப­டு­வ­தா­கவும் அத­னா­லேயே அவ்­ எ­திர்ப்பு ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் அவ்­வா­றான சமூக விழிப்­பு­ணர்வு போராட்­டங்கள் தொடர்பில் முன்­னின்று உழைத்­தமை தொடர்பில் இந்த கொடூர கொலை இடம்­பெற்­றதா எனவும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இப்­ப­டிப்­பட்ட பின்­ன­ணிகள் உள்ள நிலை­யி­லேயே மதி­தயன் அடை­யாளம் தெரி­யாத துப்­பாக்­கி­தா­ரி­களின் இலக்­கிற்கு இரை­யா­கி­யுள்ளார்.

இந்­நி­லையில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கட­மை­யாற்றும் அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­மாறு கோரி அம்­மா­வட்­டத்தின் சமூக சேவை திணைக்­கள உத்தியோ­கத்­தர்கள் கடந்த புத­னன்று மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­ல­கத்­திற்கு முன்­பாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

மண்டூர் மதி­த­யனின் கொலை குற்­ற­வா­ளி­களை உடன் கைது செய்­யு­மாறு இவ் ஆர்ப்­பாட்­டத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டது. நல்­லாட்­சியில் எமது பாது­காப்பை உறுதி செய் குற்­ற­வா­ளி­களை உடன் கைது செய் எமது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்து போன்ற சுலோ­கங்­களை தாங்­கி­யி­ருந்த அந்த ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொண்டோர் இறு­தியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு அனுப்­பு­வ­தற்­கான மகஜர் ஒன்றை மேல­திக அரச அதிபர் கே. கிரி­த­ர­னி­டமும் கைய­ளித்­தனர்.

உண்­மையில் மண்­டூரில் இடம்­பெற்ற இந்த கொலை மிகவும் பயங்­க­ர­மா­னது. வீடு தேடி வந்து அதுவும் முற்­பகல் வேளையில் ஒரு­வரை கொலை செய்து விட்டு தப்பி செல்­வ­தென்­பது மிகவும் ஆபத்­தா­னது.

இவ்­வா­றான நடவடிக்கைகள் கிழக்கில் ஆயுத கலாசாரம் ஒன்று இன்னும் இருப்பதையும் நேர்மையான அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களாகவும் பார்க்கப்பட வேண்டியவை.

கிழக்கு மாகாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் கிழக்கில் சிற்சில ஆயுத குழுக்கள் இயங்கி வந்தமைக்கான சான்றுகள் உள்ள நிலையில் அப்போது அச்சமான சூழல் ஒன்றும் கிழக்கில் நிலவியது. அத்தகைய ஒரு அச்ச சூழலை மீண்டும் உருவாக்க மதிதயனின் கொலை மூலம் எவரேனும் முயற்சிக்கின்றனரா? என சந்தேகிக்க வேண்டியும் உள்ளது.

ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொது அமைதிக்கு பாரிய அச்சுறுத்தலாக திரியும் இத்தகைய கொலையாளிகளை களையெடுக்க வேண்டியது பாதுகாப்புதரப்பின் முக்கியமான பொறுப்பாகும்.

அந்த வகையில் சமூக சேவை உத்தியோகத்தரான மதிதயனின் கொலையின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து அதன் பின்னணிகளையும் அம்பலப்படுத்தி குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் பொலிஸார் நிறுத்துவர் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அதுவரை கேசரியும் அவதானத்துடன்……….

Share.
Leave A Reply

Exit mobile version