முத்தம் கார­ண­மாக மணப் பெண் தனது திரு­ம­ணத்தை நிறுத்­திய சம்­பவம் உத்­தர பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

உத்­தர பிர­தேச மாநிலம் பரூக்­கா­பாத்தில் உள்ள நாகலா கைர்பந்த் கிரா­மத்தைச் சேர்ந்த ருச்சி என்ற பெண்­ணுக்கும் ஜைதா­ராவைச் சேர்ந்த ராஜேஷ் என்­ப­வ­ருக்கும் கடந்த புதன்­கி­ழமை திரு­மணம் நடைபெ­ற­வி­ருந்­தது.

திரு­ம­ணத்­தன்று மாப்­பிள்ளை ஊர்­வலம் பெண் வீட்­டுக்கு வந்­தது. அப்­போது மண­ம­கனின் தந்தை பாபுராம் ருச்­சியின் ஒன்­று­விட்ட சகோ­த­ரியை திடீ­ரென முத்­த­மிட்­டுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த ருச்சி ஒழுக்­க­மில்­லாத குடும்­பத்தில் வாழ விரும்­ப­வில்லை என்று கூறி திரு­ம­ணத்தை நிறுத்­தி­யுள்ளார். பாபுராம் மன்­னிப்பு கேட்டும் ருச்சி திரு­மணம் செய்­து­கொள்ள மறுப்பு தெரி­வித்­து­விட்டார்.

இதை­ய­டுத்து பெண் வீட்டார் மாப்­பிள்ளை வீட்­டாரை ஒரு இடத்தில் அடைத்­து­வைத்து பொலிஸாருக்குத் தகவல் கொடுத்­தனர்.

பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு வந்து சமா­தான பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­டனர். ஆயினும் திருமணத்­திற்கு ஒப்­புக்­கொள்­ளாத பெண் வீட்டார் பரி­சுப்­பொ­ருட்கள் மற்றும் திரு­மண செலவு ரூ.27 ஆயி­ரத்து 900 ரூபாவை மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுக்கொண்டு அவர்களை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்

Share.
Leave A Reply

Exit mobile version