பாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

பலவிதமான ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் அமெரிக்காவின் மகா சூலுட்ஸ் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த நிபுணர்கள் பாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை தயாரித்துள்ளனர்.

சிறுத்தை புலியை போன்ற தோற்றத்தில் 4 கால்களுடன் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த ரோபோ சமீபத்தில் சோதித்து பார்க்கப்பட்டது அது உண்மையான சிறுத்தைப்புலி போன்று அதிவேகத்தில் பாய்ந்து சென்றது.

பல தடைகளை தாண்டி தானாகவே தாவிக்குதித்து மின்னல் வேகத்தில் சென்றது. இந்த ரோபோவில் கமரா அல்லது மற்ற தொழில் நுட்பங்களோ பயன்படுத்தவில்லை. மாறாக அதில் ‘லிடார்’ என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

Share.
Leave A Reply

Exit mobile version