தெலுங்கு சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு சரித்திர காவியமான பாகுபலி திரைப்படத்தின் 2 நிமிட நேர டிரைலர் திங்கட்கிழமை(01) வெளியிடப்பட்டது.
மகதீரா, நான் ஈ திரைப்படங்களை இயக்கிய ராஜமௌலி தான் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சரித்திர பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக உருவாகி வந்த இந்தத்திரைப்படத்தின் முதல்பாகத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுவருகின்றது பிரமாண்ட அரண்மனை, அழகு நீர்வீழ்ச்சி, ஆக்ரோஷமான போர்க்கள காட்சிகள் என டிரைலரை பார்க்கும்போது, ஹொலிவூட் திரைப்படங்களை போல மிரட்டும் வகையில் அமைந்துள்ளது.
கீராவணியின் அசைக்கமுடியா பின்னணி இசையின் வலுவுடன் ராஜமௌலியின் இரண்டரை வருட உழைப்பு 2 நிமிட டிரைலரில் பரதிபலிப்பதுடன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.