யாழ். நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளது.

கடந்த 19, 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பேராட்டங்களைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் மீது இடம்பெற்ற தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை,

jaffna_court_01தமக்கு கிடைத்துள்ள வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை வைத்து அடையாளம் கண்டு விசாரணைக்கு உதவுவதற்கே கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழுவொன்று யாழ் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு பொலிஸ் தலைமையக சி.சி.ரீ.வி. கமெரா பிரிவின் விசேட நிபுணர் குழுவே நேற்றுத் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாருக்கு கிடைக்பெற்ற வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் வன்முறைகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் குற்றப்புலனாய்வு பரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்தே இந்தக் குழு யாழ்ப்பாணம் விரைந்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஈடுபட்ட களோபரங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version