ஏ.டி.எம்.களில் மோசடி மற்றும் திருட்டுகளை தடுக்க உலகிலேயே முதல்முறையாக முகத்தை பார்த்து பணம் எடுக்கும் Facial Recognition Technology உடன் கூடிய நவீன ஏ.டி.எம். இயந்திரத்தை சீனா உருவாக்கி உள்ளது.
சின்குவா பல்கலைக்கழகம் மற்றும் செக்வான் டெக்னாலஜி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஏ.டி.எம்.ஐ உருவாக்கியுள்ளனர்.
இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
ஏற்கனவே, கைரேகை பதிவு மூலம் பணம் எடுக்கும் ஏ.டி.எம். இயந்திரங்கள் சிலி, கொலம்பியா போன்ற நாடுகளில் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கிறது.
ஆனால், அது போன்ற பயோமெட்ரிக் ஏ.டி.எம்.கள் அதிக செலவினம் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் வைக்கப்படவில்லை.
இந்நிலையில், சீனாவின் இந்த புதிய கண்டுபிடிப்பு விரைவில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குப்பையில் வீசப்பட்டிருந்த 2.6 கோடி ரூபா பெறுமதியான கணினி
2015-06-03 10:30:54
அக்கணினி சுமார் 2 லட்சம் டொலர் (சுமார் 2.6 கோடி ரூபா) வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அப்பிள் 1 கணினி அமெரிக்காவின் பிரபல இலத்திரனியல் நிறுவனமான அப்பிள் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட முதலாவது கணினியாகும்.
அந்நிறுவனத்தினால் தயாரிக்கப்பட் முதல் விற்பனைப் பொருளாகவும் இது அமைந்தது.
ஸ்டீவ் வொஸ்னியாக் இக்கணினியை வடிவமைத்தார். அவரின் நண்பரான ஸ்டீவ் ஜொப்ஸ் இக்கணியை விற்பனை செய்தார்.
1976 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாநிலத்தில் இக்கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மொடலில் 200 கணினிகள் மாத்திரமே தயாரிக்கப்பட்டிருந்தன.
இனந்தெரியாத பெண்ணொருவர் ஏனைய பல இலத்திரனியல் பொருட்களுடன் இக்கணினிகளில் ஒன்றையும் சான்பிரான்ஸிஸ்கோ நகரிலுள்ள மீள்சுழற்சி நிலையமொன்றில் வைத்துவிட்டுச்சென்றுள்ளார்.
மேற்படி மீள்சுழற்சி நிலையத்தினர் இக்கணினியை ஏலத்தில் விற்பனை செய்தபோது அதை ஒருவர் 2 லட்சம் டொலர்களுக்கு வாங்கியுள்ளார்.